பொம்பலூர், மார்ச் 13- பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் உள்ள ஆல் மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளியில் இளைஞர் நலன் விளையாட்டு துறை, விளையாட்டு மேம்பாட்டு ஆணை யம், கோ-கோ கூட்டமைப்பு ஆணையம் மற்றும் தமிழ்நாடு மாநில கோ-கோ கழகம் சார்பில் மார்ச் 11 அன்று மாநில அள விலான கோகோ விளையாட்டு போட்டி நடைபெற்றது. பெண்களுக்கான இப்போட்டியில் ஈரோடு, சென்னை, சிவகங்கை, கோவை, கன்னியாகுமரி, சேலம், கிருஷ்ண கிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களை சேர்ந்த 150 வீராங்க னைகள் பங்கேற்றனர். இதன் இறுதி போட்டியில் சிவகங்கை அணி முதல் இடத்தையும், ஈரோடு அணி 2 இடத்தையும் பிடித்தன. வெற்றி பெற்ற அணிகளுக்கு பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், ஆல்மைட்டி பள்ளியின் தாளா ளர் ராம்குமார் ஆகியோர் சான்றிதழும் வெற்றிக் கோப்பை யும் வழங்கினர். நிகழ்ச்சியில் தமிழ்நாடு கோகோ கழக செயலாளர் யு. நெல்சன் சாமுவேல், இணை செயலாளர்கள் எம்.அசோக், கருப்பையா, ராஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்