districts

img

தொழிற்சாலைகள் அமைத்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் மாணவர் சங்க மாவட்ட மாநாடு வலியுறுத்தல்

பெரம்பலூர், ஆக.14 - இந்திய மாணவர் சங்கத்தின் 6-வது மாநாடு ஞாயிறன்று பெரம்பலூர் லட்சுமி நர்சிங் கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற் றது. நிர்வாகி ஆர்.ராம கிருஷ்ணன் தலைமை வகித் தார். மாநில செயற்குழு உறுப் பினர் ஜி.கே.மோகன் துவக்க  உரையாற்றினார்.  மக்களுக்கான மருத்து வர் கழக மாநிலச் செயலா ளர் டாக்டர் சி.கருணாகரன், பேராசிரியர்கள் ஸ்ரீதர், கும ணன் ஆகியோர் வாழ்த்துரை  வழங்கினர். மாநில துணைத் தலைவர் எம்.கண்ணன் கோரிக்கைகளை விளக்கி நிறைவுரை ஆற்றினார்.  பின்னர் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்களில், தனி யார் கல்வி நிறுவனங்களில் நடைபெறும் கட்டண கொள் ளையை தடுத்து நிறுத்த நட வடிக்கை எடுக்க வேண்டும்.  பெரம்பலூர் மாவட்டத்தி லுள்ள அரசு கலைக் கல்லூரி களில் அடிப்படை கட்ட மைப்பு வசதிகளை மேம்ப டுத்த வேண்டும். குறிப்பாக அரசு கல்லூரிகளில் படிக் கும் மாணவ-மாணவிகள் சரியான நேரத்தில் பய ணிக்க பேருந்து வசதி யில்லை. உடனே பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.  பெரம்பலூர் மாவட்டத் தில் வேலை வாய்ப்பில்லா மல் இளைஞர்களின் வாழ் வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே தொழிற் சாலைகள் அமைத்து வேலை வாய்ப்பை வழங்க  வேண்டும். பெரம்பலூர் மாவட் டத்தில் வேளாண் கல்லூரி  மற்றும் கிடப்பில் போடப்பட் டுள்ள மருத்துவக் கல்லூரி திட்டங்களை உடனே துவக்க வேண்டும். இந்திய மாணவர் சங்கத் தின் 26 வது மாநில மாநாடு ஆக.25 முதல் ஆக.27 வரை  மூன்று நாட்கள் திருவாரூ ரில் நடைபெற உள்ள தால், பெரம்பலூர் மாவட்டத் திலிருந்து ஏராளமான இளை ஞர்கள் கலந்து கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப் பட்டனர். தலைவராக கரு ணைக்கடல், செயலாளராக ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் தேர்வு செய்யப்பட்டனர்.

;