பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், பெரம்பலூர் மக்கள் பண்பாட்டு மன்றம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து பெரம்பலூரில் எட்டாவது புத்தகத் திருவிழாவை நடத்துகின்றன. திருவிழாவை போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் துவக்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் க.கற்பகம், தனலட்சுமி சீனிவாசன் கல்விக்குழுமங்களின் செயலாளர் நீல்ராஜ், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் சி.ராஜேந்திரன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.