districts

அரசு கல்லூரிகளில் முதுநிலைப் படிப்புகளை கொண்டு வர வேண்டும் மாணவர் சங்கம் கோரிக்கை மனு

பெரம்பலூர், மார்ச் 14 - பெரம்பலூர் மாவட்ட பொது மக்கள் குறைதீர் முகாம் திங்களன்று ஆட்சியர் அலு வலக கூட்ட அரங்கில் ஆட்சியர் ப.ஸ்ரீ.வெங்கட பிரியா தலைமையில் நடைபெற்றது.  அப்போது இந்திய மாணவர் சங்க பெரம்ப லூர் மாவட்டக்குழு சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதில், பெரம்பலூர் மாவட்டத்தில் குரும்பலூர், வேப்பந்தட்டை, வேப்பூர் ஆகிய இடங்களில் அரசு கலை அறி வியல் கல்லூரிகள் உள்ளன. மொத்தம் 3 ஆயிரம் மாணவர்களுக்கு மேல் பயின்று வரு கின்றனர். புறநகர் பகுதிகளில் உள்ள இந்த  கல்லூரிகளுக்கு சென்று வர உரிய பேருந்து  வசதிகள் இல்லை. எனவே கல்லூரிகளை மையப்படுத்தி போக்குவரத்து வசதிகளை மறு சீரமைக்க வேண்டும். குரும்பலூர் மற்றும் வேப்பந்தட்டை  அரசு கல்லூரிகளுக்கு விளையாட்டு மைதா னம், நூலகம் அமைக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும். மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு கல்லூரிகளிலும் மாணவர் பேரவை  தேர்தல் நடத்த வேண்டும். இந்த கல்லூரி களில் முதுநிலைப் பாடப்பிரிவு இல்லாத தால், மேற்படிப்பு படிக்க கிராமப்புற மாண வர்கள் வெளி மாவட்டங்களுக்கு சென்று பயிலும் நிலை உள்ளது.  அரசு இதனை கவனத்தில் எடுத்து முது நிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை பெரம்பலூர் அரசு கல்லூரிகளுக்கு கொண்டு  வர வேண்டும். மேலும் இக்கல்லூரிகளில் மாணவர்களுக்கு ஏற்ப போதிய ஆசிரியர்கள் இல்லை. உடனே ஆசிரியர்களை நியமிக்க  வேண்டும். வேப்பந்தட்டை அரசு கல்லூரி யில் ஆதிதிராவிடர் விடுதி பணி துவங்கப் பட்டு பாதியிலேயே நிற்பதோடு, புதிய பிற்ப டுத்தப்பட்டோர் விடுதிக்கான நிதி ஒதுக்கீடு செய்தும் பணி துவக்கப்படவில்லை. எனவே  பணியை உடனடியாக துவக்க வேண்டும் என  குறிப்பிட்டிருந்தனர்.  பின்னர் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பி னர் ம.பிரபாகரனிடம் கோரிக்கை மனுவை  அளித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

;