districts

img

முழு நேர ஊழியராக்கி ஊதியத்தை உயர்த்துக! மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கம் மனு

பெரம்பலூர், செப். 6 - காலத்துக்கேற்ற ஊதிய உயர்வு வழங்க வேண்டும். பணி நேரத்தை நிர்ணயம் செய்து, முழு நேர ஊழி யர்களாக்க வேண்டும். ஒருமாத ஊதியத்தை தீபாவளி பண்டிகை போனசாக வழங்க வேண்டும். அனைவருக் கும் அடையாள அட்டை வழங்க வேண்டும். ஊதி யத்தை வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த வேண்டும். போக்குவரத்துப் படி, உணவுப் படி, மருத்துவ  உபகரண பராமரிப்புப் படி வழங்க வேண்டும். மலைப் பகுதிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சிறப்புப் படி வழங்க வேண்டும். ஊழியர்களின் பணிகளில் உள்ள அரசியல் தலையீடுகளை தடுத்து நிறுத்தி, சுதந்திரமாக பணி யாற்ற உத்தரவாதம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்களை தேடி மருத்துவ ஊழியர் சங்கத்தினர் (சிஐடியு)  திங்களன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலர் செல்வி தலைமை வகித்தார். சிஐடியு  நிர்வாகி ரெங்கநாதன் முன்னிலை வகித்தார். 50-க்கும்  மேற்பட்ட மருத்துவ ஊழியர் சங்கத்தினர் பங்கேற்ற னர். தொடர்ந்து, கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர்.
தஞ்சாவூர்
மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கத் தின் மாவட்டத் தலைவர் அமுதாமேரி, மாவட்டச் செய லாளர் சாய்சித்ரா, மாவட்டப் பொருளாளர் இலக்கியா, சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால், மாவட்ட  துணை செயலாளர் கே.அன்பு உள்ளிட்ட ஏராளமா னோர் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்களது கோரிக்கைகளை மனுவாக வழங்கினர்.
திருவாரூர்
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த னர். மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கத்தின்  மாநில துணை தலைவர் பி.மணியோழி தலைமையில்  நடைபெற்ற இந்த போராட்டத்தில், சிஐடியு மாவட்ட செய லாளர் டி.முருகையன், மாவட்ட தலைவர் இரா.மாலதி,  மாவட்ட பொருளாளர் எஸ்.வைத்தியநாதன் ஆகியோர்  கலந்து கொண்டனர்.

;