districts

img

புதுப்பிக்க தவறிய ஆட்டோக்களுக்கு அபராதம் விதிப்பு கால அவகாசம் கோரி ஆட்டோ தொழிலாளர்கள் மனு

பெரம்பலூர், மார்ச் 17 - பெரம்பலூர் மாவட்டத்தில் 3 பிளஸ் 1  மற்றும் ஷேர் ஆட்டோக்கள் என சுமார் 200  ஆட்டோக்களுக்கு மேல் இயங்கி வரு கின்றன. இந்நிலையில் பெரம்பலூர் வட்டார  போக்குவரத்து அலுவலர் கணேசன் தலை மையில் போக்குவரத்து அலுவலர்கள் மார்ச்  16 அன்று பெரம்பலூர் நான்குரோடு, புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சுமார் 12-க்கும் மேற்பட்ட ஆட்டோக்களுக்கு ஆண்டு தகுதிச்சான்று புதுப்பிக்கப்படாமல் இருந்ததால், வட்டார போக்குவரத்து அலுவர்கள் உடனடியாக அந்த ஆட்டோக்களை பறிமுதல் செய்து அதற்கான அபராதம் விதித்தனர். இத்தகவல் அறிந்த பெரம்பலூர் மாவட்ட 3 பிளஸ் 1 மற்றும் அனைத்து வகையான ஆட்டோ ஓட்டு நர்கள் மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தினர் சிஐடியு மாவட்ட நிர்வாகி ரெங்கநாதன் மற்றும்  எல்பிஎப் சங்க நிர்வாகி செல்லதுரை ஆகி யோர் தலைமையில் மார்ச் 17 அன்று திருச்சி -  ென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அம்மனுவில், கொரோனா காலத்தில் இருந்தே ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆட்டோக் களின் உதிரிபாகங்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இன்சூரன்ஸ் கட்டணம் இரண்டு மடங்கு அதிகரித்துள்ள நிலை யில், ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்க்கை  கேள்விக்குறியாக உள்ளது. எனவே குறித்த நேரத்தில் தகுதிச்சான்றை புதுப்பிக்க தவறி விட்டதால், ஏப்ரல் மாதம் இறுதி வரை புதுப் பிக்க கால அவகாசம் வழங்க வேண்டும் என  தெரிவித்துள்ளனர். பின்னர் வாகன ஆய்வாளர் கருப்பசாமி மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரி கணேசன் ஆகியோர் நடத்திய பேச்சு வார்த்தையில், ஆட்டோ தொழிலாளர் களுக்கு உரிய ஆலோசனை வழங்கியபின் கலைந்து சென்றனர்.

;