districts

img

புதுவை மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம்

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் விடுதியில் அடிப்படை வசதிகளை சரி செய்ய கோரி போராட்டம் நடத்திய மாணவர்களை தாக்கிய காவலர்களை கண்டித்தும், சம்பவத்திற்கு காரணமான காவல் கண்காணிப்பாளர் முருகையன்  மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மத்திய பல்கலைக்கழகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கம் புதுச்சேரி மாநில தலைவர் ஜெயபிரகாஷ் தலைமை தாங்கினார். மாணவர் சங்கத்தின் மத்திய செயற்குழு உறுப்பினர் அரவிந்த்சாமி, மாநில செயலாளர் பிரவீன்குமார், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் ஆனந்த், மாநில செயலாளர் சஞ்சய் ஆகியோர் உரையாற்றினர்.