பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஆயிரக்கணக்கான பதவிகளை ஒழித்துக்கட்டும் மனிதவள மறு சீரமைப்பு திட்டத்தை கைவிட வலியுறுத்தி புதுச்சேரி பிஎஸ்என்எல் தலைமை பொதுமேலாளர் அலுவலகம் முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். ஓய்வு பெற்றோர் சங்க தலைவர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.