districts

img

வகுப்பறையில் இடப்பற்றாக்குறை: பள்ளி மாணவிகள் போராட்டம்

புதுச்சேரி, செப். 15- புதுவை குருசு்குப்பத் தில் கிருஷ்ணராசு செட்டி யார் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 1ஆம்  வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு  வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.  கடற்கரை சாலையில் உள்ள சுப்பிரமணிய பாரதி  பள்ளியின் கட்டிடம் இடியும் நிலையில் உள்ளதால் அங்கு  படித்த சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவிகளையும் ஒருங்கிணைத்து குருசுக்குப் பம் பள்ளியில் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. 2 பள்ளிகளையும் ஒருங்கிணைத்ததால் ஒரு சில ஆசிரியர்களை வேறு பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குருசு குப்பம் அரசு பள்ளி மாண விகள் பள்ளியின் நுழைவா யில் முன்பு வகுப்புகளை புறக்கணித்து போராட்டத் தில் ஈடுபட்டனர். இதுகுறித்து பள்ளி மாணவிகள் கூறுகையில், “இரண்டு பள்ளிகளையும் ஒருங்கிணைத்து பாடம் எடுக்கிறார்கள். ஆனால், போதிய ஆசிரியர்கள் இல்லை. மாணவிகளிடம் ஆசிரியர்கள் பாரபட்சம் காட்டுகின்றனர். மாணவர்க ளுக்கு போதிய இட வசதியும் இல்லை. குடிநீரும் பற்றாக்குறை உள்ளது. கழிப்பறைக்கு செல்ல வேண்டும் என்றாலும் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது” என்றனர்.

;