districts

img

உயர்நீதிமன்ற கிளை புதுவையில் அமைக்க வேண்டும்: முதல்வர்

புதுச்சேரி,செப்.10- உயர்நீதிமன்ற கிளை புதுச்சேரியில் அமைக்க வேண்டும் என்று முதல்வர் ரங்கசாமி வலியுறுத்தினார். புதுச்சேரி காலாப்பட்டில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியின் 50 ஆம் ஆண்டு பொன் விழா  சனிக் கிழமை(செப்.10) கொண் டாடப்பட்டது. விழாவில் சிறப்பு விருந்தினராக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித் பங்கேற்று விழா மலரை வெளியிட்டார்.  இந்த விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் ரங்கசாமி பேசுகையில், “புதுச்சேரியில் சட்ட பல்கலைக் கழகம் தொடங்கு வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. இதற்கு 26 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. அது விரைவில் தொடங்கப் படும்” என்றார். புதுச்சேரி சட்டக் கல்லூரியில் படித்த வர்களில் சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி களாக உள்ளனர். புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த வழக்க றிஞர்களுக்கு சென்னை உயர்தீதிமன்றத்தில் நீதி பதியாக பணியற்ற வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுகொண்டார். உயர்நீதிமன்றத்தின் கிளை புதுச்சேரியில் வர வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து கொண்டிருக்கிறது. எனவே உயர்நீதிமன்ற கிளையை உருவாக்க வேண்டும் என்றும் ரங்கசாமி வலி யுறுத்தினார்.
தலைமை நீதிபதி
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித் பேசுகையில், “தேசிய சட்ட பல்கலைக் கழகத்தில் தீர்ப்புகளை பாடமாக வைத்துள்ளனர். அதேபோல சட்ட கல்லூரிகளிலும் தீர்ப்புகள் பாடமாக இடம்பெற வேண்டும். அப்போதுதான் நீதித்துறை பணிகளில் மாண வர்கள் இடம்பெற வழி வகுக்கும் என்று குறிப் பிட்டார்.  விழாவில் முதல மைச்சர் ரங்கசாமி, துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், உச்சநீதிமன்ற நீதிபதி சுந்திரேஷ், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, சட்டப் பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர் லட்சுமிநாராயணன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வகணபதி ஆகியோர் பங்கேற்றனர்.

;