districts

img

சித்தரவதைக்குள்ளான இருளர் மக்களுக்கு நிவாரணம் வழங்கிடுக

புதுச்சேரி,மார்ச் 29- காட்டேரிக்குப்பம் காவல்நிலையத்தில் சித்தரவதைக்கு உள்ளாக் கப்பட்ட இருளர் மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க  வேண்டும் என்று புதுச்சேரி தலைமை செயலாளரிடம்  உண்மை கண்டறியும் குழு வினர் வலியுறுத்தியுள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகம், மாநில செயலாளர் ஆர்.ராஜாங்கம், மனித உரிமை கள் அமைப்பின் தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப் பாளர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, புதுச்சேரி தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் புதுச் சேரி மாநில செயலாளர் வழக்கறிஞர் ஆர்.சரவணன் ஆகியோர் புதுச்சேரி தலைமை செயலாளர் ராஜீவ்வர்மாவை சந்தித்து இருளர் மக்கள் மீதான காவல்துறையினரின் சித்தரவதை குறித்தான அறிக்கையை வழங்கிய தோடு நீதி விசாரணைக்கு வலியுறுத்தினர். அறிக்கையின் வரு மாறு, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், காலிங்கமலை அஞ்சல், வழுதாவூர் ரோட்டின் அருகே உள்ள கே.வி.பி செங்கல் சூளையில் வேலை  செய்து வந்த பழங்குடி இரு ளர் சமூகத்தை சேர்ந்த 7 பேரை கடந்த மாதம்  பிப்ரவரி 26 ஆம் தேதி  புதுச்சேரி காட்டேரிக்குப்பம் காவல் நிலையத்திற்கு காவல் சட்டத்திற்கு புறம் பான வகையில் விசாரணைக் காக காவல்துறையினர் அழைத்துச் சென்று பொய் வழக்கு பதிவு செய்து சித்திர வதை செய்து சிறையில் அடைத்தனர்.  இதுகுறித்து உண்மை கண்டறியும் குழுவினர் பாதிக்கப்பட்ட இருளர் பழங்குடியின மக்களை நேரில் சந்தித்ததில் காவல் துறையினரின் சித்திர வதையை உண்மை தகவல் களுடன் அறிக்கையாக பதிவு செய்துள்ளனர்.
 சிபிஐ விசாரணை
எனவே காட்டேரிகுப்பம் காவல்நிலையத்தில் நடைபெற்ற சித்திரவதை குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடுவதோடு, பாதிக்கப்பட்டவர்கள் அனை வரும் பழங்குடி இருளர்கள்  என்பதால் காட்டேரிக்குப்பம் காவல் உதவி ஆய்வாளர் சரண்யா உள்ளிட்ட அனைத்து காவலர்கள் மீதும் பட்டியல் சாதியி னர் மற்றும் பட்டியல் பழங் குடியினர் வன்கொடுமை தடுப்பு திருத்தச் சட்டம் 2018 ன் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.  சரண்யா உள்ளிட்ட சம்ப வத்தில் ஈடுபட்ட அனைத்து  போலீசாரையும் உடனடி யாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.  பாதிக்கப்பட்ட பழங்குடி இருளர்களுக்கு தலா 20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட பழங்குடி இருளர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். அவர்கள் மீது  புனையப்பட்டுள்ள பொய் வழக்குகளை உடனடியாக திரும்ப பெறவேண்டும். இருளர் மக்கள் வசிக்க கூடிய பகுதியில் போதிய எண்ணிக்கையில் சுகாதார மான கழிவறைகளை உடனே கட்டிக்கொடுக்க வேண்டும். இந்த சம்ப வத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய இரண்டு மாநில காவல்துறையினர் ஈடுபட்டுள்ளதால் இந்த வழக்கை மத்திய புல னாய்வு குழு (சிபிஐ) விசா ரிக்க வேண்டும். இவ்வாறு  அறிக்கையில் கூறப்பட்டுள் ளது.

;