districts

ஒன்றிய அரசை கண்டித்து புதுச்சேரியில் பிப்.24 முழு அடைப்பு

புதுச்சேரி,ஜன.9- பிப்ரவரி 24 ல் புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் சிஐடியு உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒன்றிய பாஜக அரசு அண்மையில் கொண்டு வந்துள்ள மின்சார சட்டதிருத்தத்தை திரும்பப்பெற வேண்டும். தேசிய பணமாக்க திட்டம் உள்ளிட்ட எந்த திட்டத்தின் கீழும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது. வருமான வரி செலுத்தும் அளவிற்கு வசதி இல்லாத குடும்பங்களுக்கு பெருந்தொற்று கால நிவாரணமாக மாதம் ரூ.7,500 வழங்கவேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி வருகிற பிப்ரவரி மாதம் 23, 24-ந்தேதிகளில் நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்த போராட்டம் நடத்த மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

வேலை நிறுத்தப் போராட்டத்தை புதுச்சேரியில் வெற்றிகரமாக நடத்துவது குறித்து  ஆலொசனை கூட்டம்பு துவை ஐ.என்.டி.யு.சி சங்கத்தின் மாநில  அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு ஐஎன்டியுசி மாநில தலைவர் பாலாஜி தலைமை தாங்கினார். ஏஐடியுசி சங்கத்தின்  மாநில நிர்வாகிகள் தினேஷ் பொன்னையா, சேதுசெல்வம், முத்துராமன், சிஐடியு சார்பில் சீனுவாசன், பிரபுராஜ், மதி, ஐஎன்டியுசி நிர்வாகிகள் ஞானசேகரன், சொக்கலிங்கம், ஏஐசிசிடியு நிர்வாகி மோதி லால்,  உள்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பிப்ரவரி 23 ஆம் தேதி அனைத்து தொழிற்சாலைகளிலும் வேலை நிறுத்தம் போராட்டம் நடைபெறும்.24ல் மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்துவது. போராட்டத்தை  விளக்கி  பிப்ரவரி 10-ந்தேதி கருத்தரங்கும், 17, 18, 19-ந்தேதிகளில் பிரசார இயக்கம் நடத்துவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

;