districts

img

புதுவை சாலையோர வியாபாரிகளை ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறுவதா?: சிஐடியு ஆவேசம்

புதுச்சேரி, செப்.6- சாலையோர வியாபாரி கள் ஆக்கிரமிப்பாளர்கள் என்று சித்தரிப்பதை புதுச்சேரிஅரசு மாற்றிக் கொள்ள வேண்டும் சிஐடியு வலியுறுத்தியுள்ளது. சிஐடியு புதுச்சேரி பிரதேச சாலையோர வியா பாரிகள் சங்கத்தின் பேரவைக் கூட்டம் விளிம்பு நிலை மக்கள் வாழ்வாதார மையத்தில் நடை பெற்றது. சங்கத்தின் தலை வர் அழகர்ராஜ் தலைமை தாங்கினார். சிஐடியு பிரதேசத் தலைவர் முருகன், செயலாளர் சீனி வாசன், பொருளாளர் பிரபு ராஜ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சங்கத்தின் பொதுச் செய லாளர் வடிவேல் வேலை அறிக்கையையும் பொருளாளர் வீரமணி கண்டன் வரவு-செலவு அறிக் கையையும் தாக்கல் செய்தார். சங்க நிர்வாக கள் சூரியன்,சேவியர், அய்யனார், ரவி, அன்பழகன்,, ராமசாமி, கெம்புராஜ்,பூரணி, அந்தோணி குரூஸ், உதய சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தீர்மானம்
சாலையோர வியாபாரி களை ஆக்கிரமிப்பாளர் கள் என அடையாளப்படுத்து வதை புதுச்சேரி அரசு கைவிட வேண்டும். சாலை யோர வியாபாரிகளுக்கு சுகாதாரமான குடிநீர், கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். தனியாருக்கு ஒப்பந்தம் விட்டு வசூலிக்கும் தொகை நகராட்சி நிர்வாகமே நேரடியாக வசூலிக்க வேண்டும். சாலையோர வியா பாரிகளுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

;