districts

img

மின்சார சட்டத்திருத்த மசோதா 2022-ஐ திரும்பப் பெறுக! தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, செப்.14 - புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்து பழைய ஓய்வூதிய முறையே  தொடர வேண்டும். 56  ஆயிரம் காலிப் பணியிடங்க ளையும் நிரப்ப வேண்டும். மின்சார சட்டத் திருத்த மசோதா 2022-ஐ திரும்பப் பெற வேண்டும். தரமான தள வாடப் பொருட்களை தடை யின்றி வழங்க வேண்டும். மின் துறையை தொடர்ந்து பொதுத்துறையாகவே பாது காக்க வேண்டும். அடையா ளம் காணப்பட்ட பகுதிநேரப் பணியாளர்களை உடனடி யாக நிரந்தரப்படுத்த வேண்டும். அவுட் சோர்சிங் விடப்பட்ட துணை மின் நிலைய உத்தரவுகளை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி தமிழ் நாடு மின் ஊழியர் மத்திய  அமைப்பு சார்பில் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இதனொரு பகுதியாக டெல்டா மாவட்டங்களின் பல் வேறு பகுதிகளில் ஆர்ப்பாட் டங்கள் நடைபெற்றன. புதுக்கோட்டையில் உள்ள மின்வாரிய மேற்பார் வையாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு மின் ஊழியர் மத்திய அமைப்பின் திட்டத் தலைவர் எஸ்.சித்தையன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.ஸ்ரீதர் கண்டன உரை யாற்றினார். சிஐடியு மாவட் டத் தலைவர் க.முகமதலி ஜின்னா, திட்டச் செயலாளர்  கு.நடராஜன் உள்ளிட்டோர் பேசினர். திட்டப் பொரு ளாளர் ஆர்.ஆறுமுகம் நன்றி கூறினார்.
திருச்சிராப்பள்ளி
திருச்சி பெருநகர் வட்டம்  சார்பில் மன்னார்புரத்தில் உள்ள மின்வாரிய மேற் பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத் திற்கு சங்க வட்ட தலைவர்  நடராஜன் தலைமை வகித் தார். சங்க மாநில துணைத் தலைவர் ரெங்கராஜன், வட்ட செயலாளர் எஸ்.கே. செல்வராசு, வட்ட பொருளா ளர் பழனியாண்டி, டி.என்.பி.இ.ஓ துணை பொதுச் செயலாளர் இருதயராஜ் ஆகியோர் பேசினர். கிழக்கு கோட்ட செயலாளர் நாக ராஜன் நன்றி கூறினார்.
சிபிஎம் நூதன போராட்டம்
மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அபிஷேகபுரம் பகுதி குழு சார்பில் எட மலைப்பட்டிபுதூர் கடைவீதி யில் அரிக்கேன் விளக்கு, மெழுகுவர்த்தி ஏந்தி நூதன போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு பகுதி செய லாளர் வேலுச்சாமி தலைமை வகித்தார். ஆர்ப்பாட் டத்தை விளக்கி மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா,  மூத்த தோழர் சிராஜுதீன் ஆகியோர் பேசினர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் நான்கு ரோடு அருகிலுள்ள மேற் பார்வை பொறியாளர் அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டச்  செயலாளர் எம்.பன்னீர் செல்வம் தலைமை வகித் தார். வட்ட பொருளாளர் கே. கண்ணன், ஓய்வு பெற்றோர் நல அமைப்பு ஆர்.இராஜ குமாரன், மாநில செயற்குழு  உறுப்பினர் இளங்கோவன்  ஆகியோர் கோரிக்கை களை விளக்கி உரையாற்றி னர். அரியலூர் கோட்ட செய லாளர் ஆர்.கண்ணன் நன்றி  கூறினார்.
தஞ்சாவூர்
தஞ்சை மின்வாரிய மேற் பார்வை பொறியாளர் அலு வலக வாயிலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட் டத் தலைவர் ஏ.அதிதூத மைக்கேல்ராஜ் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் து.கோவிந்த ராஜூ, மத்திய அமைப்பின் மாவட்ட செயலாளர் பி. காணிக்கைராஜ், பொருளா ளர் எஸ்.சங்கர் மற்றும் நிர்வா கிகள், சிஐடியு முன்னாள் மாவட்டச் செயலாளர் ஆர். மனோகரன் ஆகியோர் கோரிக்கை விளக்க உரை யாற்றினர். மத்திய அமைப் பின் மாநிலச் செயலாளர் எஸ்.ராஜாராமன் நிறை வுரையாற்றினார்.

;