districts

திருச்சி முக்கிய செய்திகள்

சாலை விபத்தில்  காவல் உதவியாளர் பலி

புதுக்கோட்டை,  மார்ச் 23 - புதுக்கோட்டை மாவட் டம் ராஜவயல் பகுதியை சேர்ந்த சண்முகம் (56) வெள்ளனூர் காவல் நிலை யத்தில் சிறப்பு உதவி ஆய்வா ளராக பணியாற்றி வந்தார். வீட்டில் நடக்கவிருந்த நிகழ்ச்சிக்காக கடந்த 10 நாட் களாக மருத்துவ விடுப்பில்  இருந்துள்ளார். உறவினர்க ளுக்கு செவ்வாய்க்கிழமை அழைப்பிதழ் கொடுத்து விட்டு புதுக்கோட்டை நோக்கி வந்துள்ளார்.  சத்தியமங்கலம் பகுதி யில் வந்தபோது, அவருடைய  போனுக்கு அழைப்பு வந்த தையடுத்து  சாலை ஓரத்தில் நின்று பேசிக்கொண்டு இருந் துள்ளார். அப்போது, பின் புறம் திருச்சியில் இருந்து புதுக்கோட்டை நோக்கி வந்த  கார் பலமாக மோதியதில், பலத்த காயமடைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  தகவல் அறிந்த வெள்ள னூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த சண்முகத்தின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக புதுக் கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை  ஏற்படுத்திய கார் ஓட்டுநர் ராஜாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மருத்துவ மதிப்பீட்டு முகாம்

 தஞ்சாவூர், மார்ச் 23 - தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி யில் ஒருங்கிணைந்த பள்ளி  கல்வித் திட்டத்தின் கீழ், பேராவூரணி வட்டார வள மையத்தின் சார்பில், மாற்றுத் திறனாளி மாணவர்கள், குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்டக் கல்வி அலுவலர் கு.திராவி டச் செல்வம் தலைமை வகித் தார். அரசு ஆண்கள் மேல்நி லைப்பள்ளி தலைமை ஆசிரி யர் முதல்வன் வரவேற்றார். மாற்றுத் திறனாளிகள் நல மாவட்ட அலுவலர் எம்.சுவாமிநாதன் முகாமைத் தொ டங்கி வைத்து பேசினார்.  நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாண வர்கள், குழந்தைகள் இம் முகாமில் கலந்து கொண்ட னர்.


இன்று மருத்துவ மதிப்பீட்டு முகாம்  

தஞ்சாவூர், மார்ச் 23 - தஞ்சாவூர் மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ், குருவிக்கரம்பை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி யில், மார்ச் 24 (வியாழக்கிழமை) சேதுபாவாசத்திரம் ஒன்றியத் திற்கு உட்பட்ட பிறப்பு முதல் 18 வயது வரை உள்ள மாற்றுத் திறனுடைய குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் காலை 9 மணி முதல் மதியம் ஒரு மணிவரை நடைபெற வுள்ளது. முகாமில் கலந்து கொள்ளும் மாற்றுத்திறன் மாணவர் களுக்கு புதிய அடையாள அட்டை மற்றும் மருத்துவர்களின் பரிந்துரையின்பேரில் உதவி உபகரணங்கள் வழங்கப்படும். மேலும், இலவச அறுவை சிகிச்சைக்கும் தேர்வு செய்யப்ப டுவர். மருத்துவ முகாமில் கலந்து கொள்பவர்கள் ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், பாஸ்போர்ட் சைஸ் புகைப் படம், வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை கொண்டு  வர வேண்டும். 1 முதல் 18 வயது வரை உள்ள மாற்றுத்திறன் மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறு மாறு, சேதுபாவாசத்திரம் வட்டார வளமைய மேற்பார்வை யாளர் (பொ), ஜெ.கென்னடி, வட்டார ஒருங்கிணைப்பாளர், இயன்முறை மருத்துவர் மற்றும் சிறப்பு ஆசிரியர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். 


உலக தண்ணீர் தின விழா

கும்பகோணம், மார்ச் 23- உலக நீர் தின விழாவை முன்னிட்டு கும்பகோணம் அரசினர்  கலைக் கல்லூரி (தன்னாட்சி) புள்ளியியல் துறை சார்பாக கொண்டாடப்பட்டது.  இது தொடர்பாக மாணவர்களுக்கு நீர் தொடர்பான அறி வினை மேம்படுத்தும் வகையில் நீரின் அருமை உணர்வோம்,  நீர் ஒரு உயிர், நாம் வாழ்நாளில் நீரின் முக்கியத்துவம், நீர் மாசு பாடு, நீர் மேலாண்மை, நீர் வணிகமயமாக்கல், மேற்பரப்பு  நீர் மற்றும் நிலத்தடி நீர் பாதுகாப்பு அவசியம், நதிநீர் இணைப் பின் சிக்கல்களும் தீர்வுகளும் என்ற தலைப்புகளில் கட்டுரை  எழுதுதல், ஓவியம் வரைதல் மற்றும் வினாடி வினா ஆகிய  போட்டிகள் நடத்தப்பட்டன. புவியியல் துறைத் தலைவர் முனைவர் பா.கோபு வரவேற் றார். வேதியியல் துறை துணைத் தலைவர் பேராசிரியர் மீனாட்சி சுந்தரம் தலைமை உரையாற்றினார். பொறியாளர் கும்பகோணம் நீர்வளத்துறை காவிரி வடிநில உபகோட்ட உதவி செயற்பொறியாளர் மாரிமுத்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர் களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 

மன்னார்குடி
மன்னார்குடி தேசிய மேல்நிலைப் பள்ளியில் உலக தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்பட்டது. பசுமைப் படை  ஒருங்கிணைப்பாளர் டி.செல்வராஜ் வரவேற்றார். பள்ளி யின் தலைமை ஆசிரியர் த.லெ.ராதாகிருஷ்ணன் தலைமை  வகித்தார். சிறப்பு பங்கேற்பாளர்களாக தாளாளர் டி.பி.  இராமநாதன், மாவட்ட கல்வி அலுவலர் ஆர்.மணிவண்ணன் ஆகியோர் தண்ணீர் சிக்கனத்தின் அவசியத்தையும், மாண வர்கள் சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தினர். முன்னதாக உலக தண்ணீர் தினம் தொடர்பாக நடத்தப்பட்ட ஓவிய போட்டி மற்றும்  கட்டுரைப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாண வர்களுக்கு பரிசுகளும் சான்றிதழும் வழங்கப்பட்டன.


குடிநீரின் தன்மை குறித்து  அறிந்து கொள்வது அவசியம்

புதுக்கோட்டை, மார்ச் 23 - உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு குடிநீரின் தரத்தினை  தமிழ்நாடு குடிநீர் வடிகால்வாரிய களப் பரிசோதனை பெட்டி யின் மூலம் எளிய பரிசோதனை செய்யும் நிகழ்ச்சி செவ்வாய்க் கிழமை நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவிக்கையில், அனைத்திற்கும் ஆதாரமாக நீர்  விளங்கி வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 497  ஊராட்சிகளிலும் குடிநீர் தரம் குறித்து களபரிசோதனை பெட்டி வழங்கப்பட்டு பரிசோதனை செய்வது குறித்த பயிற்சியும்  அளிக்கப்பட்டுள்ளது. பிஎச் அளவு, காரத்தன்மை, கடினத் தன்மை உள்ளிட்ட 13 வகையான பரிசோதனைகள் மேற்கொள் ளப்பட்டு குடிநீரின் தரம் உறுதி செய்யப்படுகிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் சுகாதாரமான நீரினை பருகி ஆரோக் கியமான உடல்நிலையை பேண வேண்டும் என்றார்.