புதுக்கோட்டை,ஜூன் 17- புதுக்கோட்டை திருக் கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ் வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் யுகேஜி மாண வர்கள் களப்பயணமாக உழ வர் சந்தைக்கு வியாழனன்று அழைத்துச் செல்லப்பட்ட னர். மழலைக் குழந்தைகள் உழவர் சந்தையின் காய் கறிக் கடைகள் ஒவ்வொன்று க்கும் சென்று அவரைக் காய், பீர்க்கங்காய் பாகற் காய், கத்தரிக்காய் போன்ற காய்கறிகளின் பெயர்களை யும் விற்பனை செய்வோரி டம் ஆர்வமாய்க் கேட்டுத் தெரிந்து கொண்டனர். சந்தைக்கு வந்த மழலைக் குழந்தைகளை உழ வர் சந்தை நிர்வாகத்தினர் பிஸ்கட்டுகள் மற்றும் இனிப்பு கள் வழங்கி மகிழ்வித்தனர். விற்பனை செய்யும் கிரா மத்துப் மக்களும் அன்போடு வரவழைத்து அவர்களின் ஆர்வத்தை பாராட்டி, நெல்லி, கொய்யா, பப்பாளி, பலாப்பழம், வாழைப்பழம் மற்றும் மாம்பழங்களை குழந்தைகளுக்கு கொடுத்து மகிழ்ந்தனர்.