புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சி, ‘நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்- சிறப்பு தூய்மை பணிகள்’ அறந்தாங்கி நகரம் குட்டைக் குளத்தில் நடைபெற்றது. அறந்தாங்கி நகராட்சி மீன் அங்காடியில் மரம் நடுவிழாவும் நடைபெற்றது. அறந்தாங்கி நகராட்சி பாப்பாங்குளத்தில் தூய்மை பணி நடைபெற்றது. பணிகளை நகர் மன்ற தலைவர் இரா.ஆனந்த் துவக்கி வைத்தார். நகர மன்ற உறுப்பினர்கள், நகராட்சி சுகாதார ஆய்வாளர் நாட்ராயன் மற்றும் நகராட்சி தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.