districts

img

பாப்பாபட்டி பட்டியல் வகுப்பு மக்களின் பூர்வீக இடத்திற்கு பட்டா வழங்கக் கோரி தீண்டாமை ஒழிப்பு முன்னணி குடியேறும் போராட்டம்

புதுக்கோட்டை, அக்.18 - புதுக்கோட்டையை அடுத்த கைக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட பாப்பாபட்டி பட்டியல் வகுப்பு மக்களின்  பூர்வீக இடத்திற்கு பட்டா வழங்க வலி யுறுத்தி சிபிஎம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் செவ் வாய்க்கிழமை குடியேறும் போராட் டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங் குடி தாலுகா கைக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட பாப்பாபட்டியில் புல எண். 251/13-ல் உள்ள சுமார் ஒரு ஏக்கர் நத்தம்  புறம்போக்கில் பட்டியல் வகுப்பு மக்கள்  பல தலைமுறைகளாக குடியிருந்து  வந்தனர். இவர்கள் குடியிருந்து வந்த  பகுதி தாழ்வாக இருந்ததால் அவ்வப்போது பெய்த பெருமழை யின் காரணமாக 1962, 1972, 1990 ஆண்டுகளில் இங்கிருந்து படிப்படி யாக குடிபெயர்ந்து, அருகில் உள்ள டி.தோப்புக்கொல்லை கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் குடிபெயர்ந்தனர். இவர்கள் குடிபெயர்ந்தாலும் இவர் களுக்கான குலதெய்வம், சுடுகாடு போன்றவை இங்குதான் உள்ளன. காலப்போக்கில் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் தற்போது குடியிருந்து வரும் இடம் போதாமல் நெருக்கடியில் தவித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து தாங்கள் காலம் காலமாக குடியிருந்து வந்த பாப்பாபட்டியிலேயே அவர்கள் குடியேறிவிட முடிவுசெய்து மேற்படி  இடத்திற்கு பட்டா வழங்க வேண்டு மென சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொடர்ந்து மனுக் கொடுத்து வலியு றுத்தி வந்தனர்.

தொடர்ந்து பட்டா வழங்க மறுத்து  வந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு தீண்டாமை  ஒழிப்பு முன்னணியுடன் இணைந்து செவ்வாய்க்கிழமை குடியேறும் போராட் டத்தை நடத்தினர். போராட்டத்திற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவர் டி.சலோமி தலைமை வகித்தார். போராட்டத்தை தொடங்கி வைத்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் டி.செல்லக்கண்ணு உரையாற்றினார். சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், தீ.ஒ.மு. மாவட்டச் செயலாளர் சி.ஜீவானந்தம், கட்டுமானத் தொழி லாளர் சங்க மாவட்டச் செயலாளர் சி.அன்புமணவாளன், சிபிஎம் மாவட்ட  செயற்குழு உறுப்பினர் சு.மதியழகன், ஒன்றியச் செயலாளர் எல்.வடிவேல்,  மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பி. சுசீலா, தலைவர் எஸ்.பாண்டிச்செல்வி மற்றும் கிராம மக்கள் உட்பட 200-க்கும்  மேற்பட்டோர் பங்கேற்றனர். குடியேறும் போராட்டத்தைத் தொ டர்ந்து அங்கு சில குடிசைகளைப் போட்டு பால் காய்ச்சப்பட்டது. போராட்டம் தொடர்ந்த நிலையில், புதுக் கோட்டை கோட்டாட்சியர் முருகேசன், வட்டாட்சியர் செந்தில்நாயகி, மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் ராகவி உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில், போராட்டத் தில் ஈடுபட்டுள்ள பட்டியல் வகுப்பு  மக்கள் ஏற்கனவே பல தலைமுறை களாக இங்கு குடியிருந்து வந்தவர்கள் என்பதாலும், அந்த இடத்திலேயே தங்களுக்கு குடிமனைப் பட்டா வழங்க வேண்டுமென கோரிக்கை வைத் திருப்பதாலும் இதுகுறித்து அரசுக்கு பரிந்துரை செய்து பட்டா வழங்க உரிய  நடவடிக்கை எடுப்பது என எழுத்துப் பூர்வமாக ஒப்பந்தம் நிறைவேற்றப் பட்டது.  இதனைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

;