புதுக்கோட்டை, மார்ச் 27 - புதுக்கோட்டையில் வாலிபர், மாண வர் சங்கங்களின் சார்பில் 91 பேர் ரத்த தானம் செய்தனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கங்களின் புதுக் கோட்டை நகரக்குழு சார்பில் மாவீரன் பகத்சிங்கின் நினைவு தினத்தை முன்னிட்டு ரத்ததானம் வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு வாலிபர் சங்க நகரத் தலைவர் ஏ.டேவிட், மாணவர் சங்க நகரத் தலைவர் எஸ்.மகாலெட்சுமி ஆகியோர் தலைமை வகித்தனர். ரத்த தான முகாமை கந்தர்வ கோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், வாலிபர் சங்கத்தின் முன்னாள் மாவட்டச் செயலாளருமான எம்.சின்னதுரை தொடங்கி வைத்தார். முகாமில் ரத்தம் வழங்கியவர்களுக்கு சான்றிதழை வழங்கி சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி சிறப்புரையாற்றி னார். புதுக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா, கோட்டாட்சியர் கே.கருணாகரன், நகர் மன்றத் தலைவர் திலகவதிசெந்தில், நகர்மன்ற உறுப்பினர் மூர்த்தி, மருத்து வர்கள் க.இராமு, ரெ.கார்த்திக்தெய்வ நாயகம் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசி னர். பகத்சிங்கின் 91 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு வாலிபர், மாண வர்கள் 91 பேர் தங்களது ரத்தத்தை கொடையாக வழங்கினர். வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் துரை.நாராய ணன், மாணவர் சங்க மாவட்டச் செயலா ளர் எஸ்.ஜனார்த்தனன் மற்றும் நிர்வாகி கள் பங்கேற்றனர்.