districts

img

அரையப்பட்டி ஊராட்சியில் குறுங்காடுகள் அமைக்கும் திட்டம் அமைச்சர் தொடங்கி வைத்தார்

புதுக்கோட்டை,  மே 18 - புதுக்கோட்டை மாவட் டம் அரையப்பட்டி ஊரா ட்சியில் குறுங்காடுகள் அமைக்கும் திட்டத்தின் கீழ்  மரக்கன்றுகள் நடும் பணி களை சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநா தன் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.  அப்போது அவர் கூறு கையில், “தமிழகத்தில் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வகை யில் 22 சதவீதமாக உள்ள  வனப்பரப்பினை 33 சதவீத மாக உயர்த்தும் நடவடிக் கைகளை அரசு மேற்கொண்டு  வருகிறது. அரையப் பட்டி ஊராட்சி, வன்னியன் விடுதியில் உள்ள நாவல் குளத்தில் குறுங்காடுகள் அமைக்கும் திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.  இதில் 3 ஏக்கர் பரப்ப ளவில் வேம்பு, பூவரசு, அரசமரம், புங்கன், நாவல் மற்றும் வாகை உள்ளிட்ட 500  மரக்கன்றுகள் நடவு செய்யப் பட்டுள்ளன. மேலும் இத்திட்டத் தின் கீழ் அரசு மற்றும் தனி யார் இடங்களில் குறுங்காடு கள் அமைப்பதற்கும் நடவ டிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட  ஆட்சியர் கவிதா ராமு  தலைமை வகித்தார். வரு வாய் கோட்டாட்சியர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து  கொண்டனர்.

;