districts

img

தானிய சேமிப்பு கிட்டங்கி, பயணியர் நிழற்குடை கட்டுமான பணிக்கு அமைச்சர் அடிக்கல் நாட்டினார்

அறந்தாங்கி, மே 14 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு திட்ட கட்டிட பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய விழா மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது. அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் எரிச்சி சிதம்பரவிடுதியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் தமிழக முதல்வர் சட்டமன்ற 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட 250 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட தானிய சேமிப்பு கிட்டங்கி கட்டுமான பணிகள் ரூ.50 லட்சம் மதிப்பீட்டிலும், இராஜேந்திரபுரம். எருக்கலக்கோட்டை நாகாம்மாள்கோவில் கலையரங்கம் ரூ.7 லட்சம் மதிப்பீட்டிலும், இராஜேந்திரபுரத்தில் பயணியர் நிழற்குடை ரூ.6.5 லட்சம் மதிப்பீட்டிலுமான கட்டுமான பணிகளுக்கு சுற்றுசூழல் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சிகளில் வருவாய் கோட்டாட்சியர் சொர்ணராஜ், அறந்தாங்கி ஒன்றிய குழு தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், வட்டாட்சியர் காமராஜ், வேளாண் விற்பனை குழு செயலர் மல்லிகா, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

;