districts

img

தீபாவளி முன்பணம் ரூ.10 ஆயிரம் வழங்குக! உள்ளாட்சித் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, அக்.10 - ஒப்பந்த ஊழியர்களுக்கு அரசு அறி வித்துள்ளபடி குறைந்தபட்ச ஊதியம் ரூ.600  வழங்க வேண்டும். மாதம் 5 ஆம் தேதிக்குள்  சம்பளம் வழங்க வேண்டும். தொழிலாளர் களிடம் பிடித்தம் செய்துள்ள வருங்கால வைப்பு நிதி மற்றும் கூட்டுறவு சங்கத்திற்காக  பிடித்தம் செய்துள்ள தொகைகளை தாமத மின்றி வழங்க வேண்டும். தீபாவளி முன்பண மாக நிரந்தர ஊழியர்களுக்கு ரூ.10 ஆயிரம்,  ஒப்பந்த ஊழியர்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க  வேண்டும். அனைத்துத் தரப்பு முன்களப் பணி யாளர்களுக்கும் அரசு அறிவித்துள்ள ஊக்கத்தொகை ரூ.15 ஆயிரத்தை உடன டியாக வழங்க வேண்டும். நகராட்சியில் பயன்படுத்தப்படும் தள்ளு வண்டி மற்றும் பேட்டரி வண்டியை பழுது நீக்கித் தருவதோடு, தரமான வண்டிகளை கூடுதலாக வழங்க வேண்டும். கிருமி நாசினி,  முகக்கவசம், கையுறை போன்ற பாதுகாப்பு உபகரணங்களை கூடுதலாக வழங்க வேண்டும். ஒப்பந்தத் தொழிலாளர்கள் போராடிப் பெற்ற வாரவிடுப்பு, விழாக்கால விடுப்புகளை அமல்படுத்த வேண்டும். குப்பைகளைப் பிரிப்பதற்கு கூடுதல் பணி யாளர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளாட்சித் தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் திங்கள்கிழமை புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு புதுக் கோட்டை மாவட்ட உள்ளாட்சித் தொழிலா ளர் சங்கப் பொதுச் செயலாளர் க.முகமதலி ஜின்னா தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர் சிறப்புரை யாற்றினார். கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் சி.அன்பு மணவாளன், துணைச் செயலாளர் சி.மாரிக் கண்ணு, ஒருங்கிணைப்பாளர் சி.முத்தையா உள்ளிட்டோர் பேசினர்.

;