districts

கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு கடன் வழங்க வேண்டும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை

புதுக்கோட்டை, ஜூலை 1- தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் விவ சாயிகளுக்கு உடனுக்குடன் கடன் வழங்க வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் புதுக் கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டை ஒன்றிய மாநாடு வியாழக்கிழமை கந்தர்வ கோட்டையில் நடைபெற் றது. மாநாட்டிற்கு எஸ்.நாராயணசாமி தலைமை வகித்தார். மாநாட்டை தொ டங்கி வைத்து மாவட்டச் செயலாளர் எஸ்.பொன்னுச் சாமி பேசினார். வேலை  அறிக்கையை ஒன்றியச்  செயலாளர் ஜி.பன்னீர் செல்வம் வாசித்தார்.  மாநாட்டை வாழ்த்தி விதொச மாநில பொருளா ளர் எஸ்.சங்கர், விச மாவட் டத் தலைவர் ஏ.ராமையன், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் வி.ரெத்தினவேல் ஆகி யோர் பேசினர். புதிய நிர்வா கிகளை அறிமுகம் செய்து  மாநிலச் செயலாளர் சாமி. நடராஜன் சிறப்புரையாற்றி னார். மாநாட்டில் தலைவராக க.சோட்டுத்துரை, செயலா ளராக எஸ்.நாராயணசாமி, பொருளாளராக கே.ஜீவானந் தம் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல் படுத்த வேண்டும். தொடக்க  வேளாண்மை கூட்டுறவு  சங்கங்களில் விவசாயி களுக்கு உடனுக்குடன் கடன் வழங்க வேண்டும். விவசாயி களுக்கு உரம் உள்ளிட்ட இடு பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

;