districts

img

தூத்தூர் கிராமத்தில் மீன்பிடி திருவிழா

பொன்னமராவதி, மே 27 - புதுக்கோட்டை மாவட்டம் பொன்னம ராவதி அருகே உள்ள தூத்தூர் கிராமத்தில் கண்மாயில் மழை பெய்யவும், விவசாயம் தழைக்கவும் வேண்டி மீன்பிடி திருவிழா நடைபெற்றது.   பொன்னமராவதி சுற்றுவட்டாரப் பகுதி களில் நெல் அறுவடைக்கு பின்னர் கோடை காலத்தில் வற்றும் சூழலில் உள்ள பாசன‌  கண்மாய்களில் மீன்பிடி திருவிழா நடைபெறு வது வழக்கம். அனைவரும் ஒன்றுகூடி நடைபெறும் மீன்படி திருவிழா, கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு காரணமாக சில ஆண்டுகளாக நடைபெறவில்லை.  இந்நிலையில் வியாழனன்று தூத்தூர் கிராமத்தில் உள்ள தூத்துக் கண்மாயில் மீன்பிடித் திருவிழா பிரம்மாண்டமாக நடை பெற்றது. பொன்னமராவதி சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொமக்கள், கண்மா யில் இறங்கி பாரம்பரிய முறையில் ஊத்தா,  வலை, பரி, கச்சா ஆகிய மீன்பிடி உபகர ணங்களை கொண்டு மீன்களை பிடித்தனர். அதில் ஒவ்வொருத்தர் கைகளுக்கும் நாட்டு  வகை மீன்களான கெளுத்தி, குரவை, ஜிலேபி,  கெண்டை, அயிரை, கட்லா, விரால் ஆகிய மீன்கள் கிடைத்தன.

;