districts

img

மயானம் அமைப்பதற்கு நிலத்தை தானமாக வழங்கிய மூதாட்டிக்கு ஆட்சியர் பாராட்டு

பொன்னமராவதி, செப்.24 - புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் சுமார் 1.75 ரூபாய் மதிப்பீட்டில் நவீன மின் மயானம் ஜே.ஜே.நகர் மயானத்தில் அமைய இருந்தது. இந்நிலையில் மின் மயானம் அமைக்க அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் தனிநபர் பட்டாவில் இருந்த  திருமக்கேனி கண்மாய் மயானம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டது. இந்த மயானம் அமைந்துள்ள இடம் பொன்னமராவதி வலையபட்டியைச் சேர்ந்த தேனம்மை ஆச்சி என்பவருக்கு சொந்தமானது. இந்த இடத்தையும், மயானத்தையும் சேர்த்து சுமார் 52.30 சென்ட் நிலத்தை, தேனம்மை ஆச்சி அரசிற்கு தானமாக வழங்கி மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவிடம் ஒப்படைத்தார். தேனம்மை ஆச்சியின் இந்த சேவையை பாராட்டி, ஆட்சியர் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.  மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி, பொன்னமராவதி ஒன்றிய ஆணையாளர் தங்கராஜ், தொட்டியம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கீதா சோலையப்பன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

;