districts

img

சமூக சேவையாற்றியவர்களுக்கு விருது

அறந்தாங்கி, டிச.11- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி  ப்ரண்ட்ஸ் ரோட்டரி கிளப் சார்பில் கார்னி வல் ஸ்கில் டிரைனிங் இன்ஸ்டியூட்டில் போட்டி தேர்வுக்கான பயிற்சி மையம் தொடங் கப்பட்டது.  பயிற்சி மையத்தை ரன்ஸ் ரோட்டரி கிளப்  தலைவர் செந்தில்குமார் தலைமையில், துணை ஆளுநர் தங்கதுரை முன்னிலை யில், ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஜ.ஜெரால்டு  துவக்கி வைத்தார். ரோட்டரி கிளப் மண்டல  ஒருங்கிணைப்பாளர் பீர்சேக், துணை ஆளு நர் செலக்சன் சுரேஷ்குமார், அப்பாஸ் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து வர்த்தக சங்க அரங்கில், ரோட்டரி  மாவட்ட ஆளுநர் ஜெரால்டு, சிறந்த சமூக பணியாற்றிய கவிஞர் அஜய்குமார் கோஷ், டாக்டர் அசாருதீன், சிகை அலங்கார நிபுணர்  கவுதமன் ஆகியோருக்கு விருது வழங்கி பாராட்டினார்.