அறந்தாங்கி, பிப்.16 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நக ராட்சியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக அறந்தாங்கி நகர்மன்ற 24 ஆவது வார்டில் சம்சாத்பேகம் போட்டியிடுகிறார். அவ ருக்கு அறந்தாங்கி சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.டி. ராமச்சந்திரன் அரிவாள், சுத்தியல், நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தார். அவருடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூடலூர் முத்து, பஷிர்அலி, சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் கள் சி.சுப்பிரமணியன், கே. தங்கராஜ், சிபிஎம் ஒன்றிய செயலாளர்கள் தென்றல் கருப்பையா, நெருப்பு முரு கேஷ், வாலிபர் சங்க மாவட் டத் தலைவர் கர்ணா, திமுக பிரமுகர் சீனிவாசன், திமுக வட்ட செயலாளர் நாராயணன் மற்றும் மாதர் சங்கத்தினர் பங்கேற்றனர்.