districts

மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள், ஏடிஎம்-மை அமைச்சர் திறந்து வைத்தார்

புதுக்கோட்டை, மே 12-  மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில் புதிய வங்கிக் கிளைகளை யும், ஏடிஎம் மையங்களையும் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி புதனன்று திறந்து வைத்து ரூ.4.80 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது: ‘‘புதுக்கோட்டை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 27-ஆவது புதிய கிளை புதுக்கோட்டை டிவிஎஸ் நகரிலும், 28-ஆவது புதிய கிளை அரிமளம் ஒன்றியம், தேனிப்பட்டியி லும் மற்றும் அரிமளம், விராலி மலையில் தலா ஒரு மத்திய கூட்டுறவு வங்கியின் ஏடிஎம் மையங்க ளும் திறந்து வைக்கப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டத்தில் சென்ற ஆண்டு 48,088 விவசாயிக ளுக்கு ரூ.225.00 கோடி வட்டியில்லா  பயிர்க்கடனும், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 7,741 நபர்களுக்கு ரூ.19.33 கோடியும், கால்நடை வளர்ப்பிற்கான நடைமுறை மூல தனக் கடன்கள் 5,589 நபர்களுக்கு ரூ.12.13 கோடியும், மாற்றுத்திறனா ளிகள் 246 நபர்களுக்கு ரூ.1.15 கோடியும், கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் 228 நபர்களுக்கு ரூ.47 லட்சமும், புதுக்கோட்டை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதனைச் சார்ந்த 136 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களால் வழங்கப்பட்டுள்ளது’’ என்றார்.  இதில், புதுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்து ராஜா, மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;