districts

img

தீக்கதிர் செய்தி எதிரொலி நாட்டாணிக்கோட்டையில் புதிய பள்ளிக்கடடிடத்தை அமைச்சர் திறந்து வைத்தார்

தஞ்சாவூர், ஜூலை 6-  தீக்கதிர் செய்தி எதிரொலியாக கட்டி முடிக்கப்பட்டு, திறக்கப்படாமல் இருந்த, பள்ளிக் கட்டிடத்தை பள்ளிக்  கல்வித்துறை அமைச்சரால் நேரடியாக திறந்து வைக்கப்பட்டது.  தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சிக்குட்பட்ட நாட்டாணிக் கோட்டை வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உள்கட்டமைப்பு மேம்பாட்டு சீரமைப்பு திட்டத்தின் கீழ்  ரூ.17 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறைகள் கொண்ட கட்டி டம் கட்டப்பட்டு பணி முடிந்து திறக்கப்  படாமல் இருந்தது.  இது குறித்து கடந்த ஜூலை 1ஆம்  தேதி தீக்கதிர் நாளிதழில், “கட்டி முடிக் கப்பட்டும் திறக்கப்படாத வகுப்பறை, வராந்தாவில் அமர்ந்து படிக்கும் மாண வர்கள்” என்ற தலைப்பில் செய்தி வெளி யாகியிருந்தது.  இந்நிலையில் இது குறித்து மாவட்ட  ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்,  கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த்  ஆகியோர் உடனடியாக பள்ளி கட்டி டங்களை திறப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறு, வட்டார வளர்ச்சி அலு வலர்களுக்கு உத்தரவிட்டனர்.  இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை பள்ளி கல்வித்துறை அமைச் சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிக் கட்டிடத்தை திறந்து வைத் தார்.  அப்போது அவர் பேசுகையில், அரசுப் பள்ளிகளை நோக்கி மாண வர்களின் வருகை அதிகமாக உள்ளது.  

ஆசிரியர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து தரமான கல்வியை வழங்கி  மாணவர்களை தக்க வைத்துக் கொள்ள  வேண்டும். பெற்றோர்கள் தங்கள் குழந்  தையை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்க்கக் கூடாது. ஒவ்வொரு குழந்தைக்  கும் தனித்தன்மை இருக்கும். அதனைக் கண்டுபிடித்து ஊக்கப்படுத்தி திறமை யை வெளிக் கொண்டு வரவேண்டும். ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர் வோடு பணியாற்ற வேண்டும்” என் றார்.  இவ்விழாவில் கூடுதல் ஆட்சியர் ஸ்ரீகாந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் பேராவூரணி என்.அசோக்குமார், திரு வையாறு துரை.சந்திரசேகரன், பட் டுக்கோட்டை கா.அண்ணாதுரை, சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றி யப் பெருந்தலைவர் மு.கி. முத்து மாணிக்கம், திமுக ஒன்றியச் செயலா ளர்கள் க.அன்பழகன், வை.ரவிச்சந்தி ரன், பேரூராட்சி தலைவர் சாந்தி சேகர்,  வட்டார வளர்ச்சி அலுவலர் தவமணி,  குமாரவடிவேல், பள்ளி தலைமை ஆசி ரியை நிர்மலா மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிக் குழந்  தைகளுடன் உரையாடினார். அவர் களுக்கு ஆட்டோ கிராப் போட்டுக் கொடுத்ததுடன், குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.