districts

img

மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை ரூ.3 ஆயிரம் வழங்குக! மணமேல்குடி ஒன்றிய மாநாடு வலியுறுத்தல்

அறந்தாங்கி, ஜன. 8 - புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி யில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்தி றனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்க 2-வது ஒன்றிய மாநாடு செய லாளர் எம்.தங்கவேலு தலைமையில் மண மேல்குடி வசந்தம் மண்டபத்தில் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகளின் துணை ஒருங்கி ணைப்பாளர் எஸ்.சேகர் சங்க கொடியேற்றி னார். மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தலைவராக எஸ்.சேகர், செயலாளராக எம்.தங்கவேல், பொரு ளாளராக நாராயணன், துணைத் தலைவர்க ளாக மதலைமேரி, ஆறுமுகம், துணைச் செய லாளர்களாக சுரேஷ், கண்ணன் மற்றும் மரியசெல்வம், சக்தி, முகமது, அலெக்ஸ், முக மது அப்துல்லா, அப்துல்காதர் உள்ளிட்ட ஒன்றியக் குழுவும் தேர்வு செய்யப்பட்டது. மாநாட்டில் ஸ்ரீ சாய் நாட்டியாலய பவ தாரிணி பரத நாட்டிய நிகழ்ச்சி, மாவீரன் சிலம்ப  பாசறை இராசி.கார்த்திக் குழுவினரின் சிலம்பம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

சிறப்பு  அழைப்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் வாழ்த்தி பேசினார். மற்ற மாநிலங்களில் போல மாற்றுத்தி றனாளிகளின் மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை ரூ.3000 வழங்க வேண்டும். கடும்  ஊனமுற்றோருக்கு ரூ.5000 வழங்க வேண்டும். நூறு நாள் வேலை திட்டத்தில்  மாற்றுத்திறனாளிகளுக்கு முறையாக வேலை வழங்க வேண்டும். அரசு போக்கு வரத்து நடத்துநர்கள் மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தும் விதமாக நடந்து கொள்வதை  வன்மையாக கண்டிக்கிறோம்.  மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு நலத்  திட்டங்களை தாமதமின்றி செயல்படுத்தி வேலைவாய்ப்பு உருவாக்க வேண்டும்.  வட்டாட்சியர் தலைமையில் மாதந்தோறும்  குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.  தனியார் துறையில் மாற்றுத்திறனாளி களுக்கு தனி இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

;