districts

img

அறந்தாங்கி தி போர்ட் சிட்டி ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

அறந்தாங்கி, ஜூலை 18 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தி ஃபோர்ட் சிட்டி ரோட்டரி சங்கம் ஏழாம்  ஆண்டு பதவியேற்பு விழா ரோட்டரி ஆளு நர் ஜெரால்ட் தலைமையில் நடை பெற்றது. ஸ்டார் தலைவர் முஜிபுர் ரஹ்மான் வரவேற்றார். ரோட்டரி துணை  ஆளுநர் சுரேஷ்குமார், மண்டல செயலா ளர் பீர் சேக் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தேர்வு ஆளுநர் ராஜா கோவிந்தசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.   2022-23 ஆண்டுக்கான சியர்ஸ் தலை வராக விகாஸ் சரவணன், செயலாளராக கணேசன், பொருளாளராக கண்ணன் ஆகியோர் பதவி ஏற்றுக் கொண்டனர். பட்டய தலைவர் மருத்துவர் தெட்சிணா மூர்த்தி ஆட்சிமன்ற குழுவை அறிமுகப் படுத்தி உரையாற்றினார். பின்னர் ஆட்சி  மன்றக் குழு உறுப்பினர்கள் அறிவிக்கப் பட்டனர்.  சிறப்பாக கல்வி சேவை ஆற்றிய ஆசிரியர்களுக்கும், அறந்தாங்கி ரோட்டரி  சங்கம், அறந்தாங்கி பிரண்ட்ஸ் ரோட்டரி சங்கம், அறந்தை ரோட்டரி சங்கம், திசை கள் மாணவ வழிகாட்டி அமைப்பு, நகராட்சி சுகாதாரத் துறை, தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத், அக்னி சிறகுகள், கராத்தே பிரதர்ஸ் அறக்கட்டளை, கூடை  பந்தாட்ட கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுக்கும் மக்கள் சேவை விருது கள் வழங்கப்பட்டன.  சியர்ஸ் ஆண்டு தலைவர் விகாஸ்  சரவணன் தலைமையில் நாயக்கர்பட்டி அரசு பள்ளிக்கு ஸ்மார்ட் தொலைக் காட்சி வழங்கப்பட்டது.