districts

img

மீனவர் வலையில் சிக்கிய 65 கிலோ எடை திருக்கை மீன்

அறந்தாங்கி, ஏப்.7-  புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடி யில் பெரிய மீன் மார்க்கெட் உள்ளது. இங்கு  அரியவகை மீன்களும், ராட்சத மீன்களும் விற்பனைக்கு வருகின்றன.  இந்நிலையில், வடக்கம்மாபட்டி னத்தைச் சேர்ந்த மீனவர் நிசார் என்பவ ரின் நாட்டுப் படகில் ராட்சத திருக்கை மீன்  சிக்கியது. 65 கிலோ எடை கொண்ட திருக்கை மீன் கட்டுமாவடி மீன் மார்க்கெட் டுக்கு விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது.  ஒரு கிலோ 120 ரூபாய் வீதம் 65 கிலோ எடைக்கு ரூ.7,800 க்கு ஏலம் போனது. திருக்கை மீனை உள்ளூர் வியாபாரி ஏலம்  எடுத்தார். இந்த ராட்சத திருக்கை மீனை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்துச் சென்றனர்.