districts

img

அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் பழங்குடியின மக்கள்

உதகை, நவ.25 - கூடலூர் அருகே அடிப்படை வசதிகள் ஏதுமின்றி பழங்குடியின மக்கள் தவித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம், கூடலூர் தாலுகா  நெல்லியாளம் நகராட்சிக்குட்பட்ட ஆலி குட்டி கடை முதல், முத்தையா செட் வரை சுமார் 100க்கும் மேற்பட்ட பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் போதிய குடிநீர் வசதியில்லாததால் பெரும்பாலான மக்கள் ஏரோடு பகுதியிலிருக்கும் குழாய் தண்ணீரையே நம்பி உள்ளனர். அக்குழாய்களும் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு உள்ளதால், குடிநீரில் சேறு கலந்து குடிக்க முடியாத நிலை காணப்படுகிறது. இதேபோல், தெருவிளக்கு, நிழற்குடை, நடைபாதை உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாததால் பெரும் அவதியுற்று வருகின்றனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகம், மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர், முதல்வர் உள்ளிட்டோரிடம் மனு கொடுத்தும், பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும் இதுவரை யாரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இப்பகுதியில் குடிநீர் கிணறு அமைத்து அதன் மூலம் குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்த வேண்டும். பழுத டைந்துள்ள ரப்பர் குழாய்களை மாற்றி இரும்பு குழாய் பதிக்க வேண்டும்.  இதேபோல் தேவையான அடிப்படை வசதி களை செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.

;