districts

img

அனுமதி பெற்று மீன் பிடிக்க அறிவுறுத்தல்

நாகர்கோவில், செப்.15- தேங்காப்பட்டணம் மீன்பிடி துறை முகம் பராமரிப்பு பணி முடியும் வரை மீனவர்கள் அவரவர் கிராமங்களில் இருந்தும் வாய்ப்புள்ள பகுதிகளில் இருந்தும் படகுகளில் மீன்பிடிக்க செல்ல லாம் எனவும், ஆழ்கடல் மீன்பிடிக்க மீன்வளத்துறையின் அனுமதி பெற்று செல்ல வேண்டும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. தேங்காப்பட்டணம் மீன்பிடி துறை முகத்தில் உள்ள கட்டுமான குளறுபடி யால் முகத்துவாரத்தில் படகு கவிழ்ந்து மீனவர்கள் பலியாவது கடந்த பல ஆண்டு களாக தொடர்ந்து வருகிறது. ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இந்த விபத்துகள் அதிகமாக நடக்கும். இதனால் மீன் பிடி துறைமுகத்தை மறு சீரமைப்பு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதனை ஏற்று மத்திய-மாநில அரசுகளின் ரூ.245 கோடி நிதியில் சீரமைப்பு பணிகள் நடக்க உள்ளன. இதற்கிடையில் தற்போதைய தென் மேற்கு பருவக்கா ற்றின் தீவிர த்தால் மீண்டும் கடல் சீற்றம் அதிகமானதால் துறைமுக நுழைவு வாயில் பகுதியில் மணல் திட்டுகள் ஏற்பட்டது. இதனால் ஒரே வாரத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் பல வள்ளங்கள் அந்த பகுதியில் கவிழ்ந்து விபத்து ஏற் பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து மீன வர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கட்டு மான பணி தொடங்கி முடியும் வரை துறை முகத்தை மூட வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து மறு அறிவிப்பு வரும் வரையி லும் துறைமுகம் மூடப்படுவதாக அறி விப்பு வெளியானது. இது தொடர்பாக அங்கு விளம்பர பலகையும் அரசு சார்பில் வைக்கப்பட்டது. இதற்கிடையில் கடந்த 12ஆம் தேதி ஆழ்கடலில் இருந்து 40 க்கும் மேற்பட்ட படகுகளில் மீன் பிடித்து வந்து அவற்றை இறக்க முடியாமல் அவதிப்பட்டனர்.

தேங்கி இருந்த மீன்கள் வாய்மொழி உத்த ரவு அடிப்படையில் தேங்காபட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இறக்கி விற்கப் பட்டன. இந்நிலையில் மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி மீன் பிடித் துறைமுகத்தை மீண்டும் திறந்து மீன் பிடிக்க வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என அரசுக்கு வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து மீன்வளத் துறை துணை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகம் பராமரிப்பு பணி முடியும் வரை படகுகளில் மீனவர்கள் அவரவர் கிரா மங்களில் இருந்தும் வாய்ப்புள்ள பகுதி களில் இருந்தும் மீன்பிடிக்க செல்லலாம் என அறிவுறுத்தியுள்ளார். மேலும் ஆழ் கடலில் மீன் பிடிக்க செல்லக்கூடிய விசைப் படகுகள் மீன்வளத் துறை மூலம் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று மீன் பிடிக்கச் செல்ல வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

;