districts

img

அனைத்து ஊராட்சிகளிலும் நூறுநாள் வேலைத் திட்டத்தை அமலாக்குக!

நாகப்பட்டினம், ஜூன் 28- நூறு நாள் வேலை கேட்டு நாகப் பட்டினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் விவ சாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காவிரியின் கடைமடைப் பகுதி யான நாகப்பட்டினம் மாவட்டத்தில், விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வா தாரத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது நூறு நாள் வேலை திட்டம். கடந்த ஏப்ரல் மாதம் இத்திட்டமானது தொடங்கப்பட வேண்டும்.

ஆனால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால், நூறு நாள் வேலை கொடுக்கப்படவில்லை. ஆனால் தேர்தல் முடிந்து இவ்வளவு நாட்கள் ஆகியும் நூறு நாள் வேலை என்பது வழங்கப்படாமல் இருக்கிறது. வழக்கம் போல் ஜூன் 12 அன்று காவிரியில் தண்ணீர் திறந்து விட்டிருந்தால், விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக இருந்திருக்கும். ஆனால் இன்றுவரை காவிரியில் தண்ணீர் திறந்து விடாத தால் வறட்சி நிலவுகிறது.

மாவட்டம் முழுவதும் குடிநீர் பிரச்சனை நிலவு கிறது.  இதனால் மக்கள், எவ்வித  வேலைவாய்ப்பும் இன்றி, சொல் லொண்ணா துயரத்தில் தவித்து வரு கின்றனர். விவசாயத்தையே நம்பி இருக்கும் இந்த மாவட்டத்தில், நூறு நாள் வேலையை மட்டுமே நம்பி பல குடும்பங்கள் உள்ளன.

இந்நிலையில், நூறு நாள் வேலை யை உடனடியாக வழங்கக் கோரி,  அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்டம் முழுவதும் 74 மையங்களில் 7000-க்கும் மேற்பட் டோர் ஊராட்சி மன்ற அலுவலகங் களுக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி னர். தலைஞாயிறு ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சிபிஎம் நாகை மாவட்டச் செயலாளர் வி. மாரி முத்து கண்டன உரையாற்றினார்.

விதொச நாகை மாவட்டச் செயலாளர் எம்.முருகையன், சிபிஎம் நாகை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.வேணு, வி.அம்பிகாபதி, ப.சுபாஷ் சந்திரபோஸ், வி.ச மாவட்டச் செயலாளர் கே.சித்தார்த்தன் மற்றும் ஒன்றியச் செயலாளர்கள், மாவட்டக்குழு  உறுப்பினர்கள் கண்டன உரையாற்றினர்.  

;