districts

img

தினக்கூலி ரூ.380-ஐ மின்வாரியமே வழங்க வேண்டும் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம்/கரூர், செப்.13 - மின்துறையை பொதுத்துறையாக பாதுகாத்திட வேண்டும். 1.12.2019 முதல்  வழங்க வேண்டிய ஊதிய உயர்வை உடனே வழங்க வேண்டும். வாரிய  உயர்வு எண். 2-ஐ ரத்து செய்ய  வேண்டும். அனைத்து ஊழியர்களுக் கும் பணப்பயன்களை உடனடியாக வழங்க வேண்டும். களப் பணியா ளர்களுக்கு சீருடைகள், ரெயின் கோட்,  டார்ச் லைட், மெகர், கையுறை, செயின்  பிளாக் வழங்கிட வேண்டும். ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு தினக்கூலி ரூ.380-ஐ மின் வாரியமே நேரடியாக வழங்க வேண்டும். கேங் மேன் பயிற்சி காலத்தில் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அவர் களை சொந்த மாவட்டத்திற்கு பணி  மாறுதல் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய மைப்பினர் செவ்வாய்க்கிழமை மாநிலம்  தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாகப்பட்டினம் மேற்பார்வை பொறி யாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்திற்கு திட்ட தலைவர் என்.வெற்றிவேல் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட செயலாளர் கே.தங்க மணி, திட்ட செயலாளர் எம்.கலைச் செல்வன், திட்ட துணை ஆய்வாளர் ஆர். செந்தில்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற் றனர்.
கரூர்
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் கரூர் மாவட்டக் குழு  சார்பில் கரூர் தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் கரூர் கோட்ட தலைவர் வி.சுப்பிரமணியன் தலைமை வகித் தார். மாநிலத் துணைத் தலைவர் ஜி.கோ பாலகிருஷ்ணன், கரூர் மாவட்ட செய லாளர் க.தனபால் ஆகியோர் கண்டன  உரையாற்றினர்.

;