districts

img

பணி நிரந்தரம் செய்யக் கோரி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம், ஜன.7 - பணி நிரந்தரம், பணி வரன்முறை, கால முறை ஊதியம் வழங்க வேண்டும். வார விடு முறை, பண்டிகைக் கால விடுமுறை, இ.எஸ்.ஐ மருத்துவத் திட்டம் வழங்க வேண்டும். தொழி லாளர் நலச் சட்டங்களை முறையாக அமல்ப டுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர் சங்கம்  சிஐடியு சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. நாகப்பட்டினம் தொழிலாளர் நல அலுவ லகம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட் டத்திற்கு டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்ட செய லாளர் ஏ.சிவன் அருட்செல்வன் தலைமை  வகித்தார். சிஐடியு மாவட்ட குழு உறுப்பினர் கள் பிஎஸ்என்எல் குருசாமி, சு.மணி ஆகி யோர் கண்டன உரையாற்றினர். சிஐடியு மாவட்ட செயலாளர் கே.தங்கமணி நிறைவு ரையாற்றினார். 

தஞ்சாவூர்
தஞ்சாவூர் தொழிலாளர் துணை ஆணை யர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு, டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்டச்  செயலாளர் க.வீரையன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால், மாவட்டத் தலைவர் து.கோவிந்தராஜ், முறை சாரா தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலா ளர் பி.என்.பேர்நீதி ஆழ்வார், டாஸ்மாக் சங்க  மாவட்டப் பொருளாளர் க.மதியழகன் ஆகி யோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.  டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் வி.ஜி.கருணாநிதி, டாஸ்மாக் சங்க மாநிலக் குழு உறுப்பினர் ச. ஆறுமுகம், மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து தொழிலாளர் துறை  துணை ஆணையரை நேரில் சந்தித்து கோரிக் கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை காவிரி நகர் மேம்பாலம் அருகிலுள்ள தொழிலாளர் நல அலுவலகம் முன்பு டாஸ்மாக் ஊழியர் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் ஆர்.ராமானுஜம் தலைமை யில் வெள்ளியன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்ட செய லாளர் ராமலிங்கம், சிஐடியு மாவட்ட செயலா ளர் ஆர்.ரவீந்திரன், மாவட்ட துணைத்தலை வர் ப.மாரியப்பன், கார், வேன், ஆட்டோ ஓட்டு நர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்என்டீ ரமேஷ்  உள்ளிட்டோர் உரையாற்றினர்.
கரூர்
டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் கரூர் மாவட்டக் குழு சார்பில் வெண்ணமலையில் உள்ள தொழிலாளர் ஆணையர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஏ.பத்மஸ்ரீகாந்தன் தலைமை வகித் தார். மாநில குழு உறுப்பினர் பி.சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். சிஐடியு மாவட்ட தலை வர் ஜி.ஜீவானந்தம், மாவட்ட செயலாளர் சி. முருகேசன், டாஸ்மாக் சங்க மாவட்ட செயலா ளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கண்டன  உரையாற்றினர்.  ஊரக வளர்ச்சித் துறை சங்க செயலா ளர் கா.கந்தசாமி, கட்டுமான சங்க மாவட்ட செய லாளர் சி.ஆர்.ராஜாமுகமது, சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் எம். தண்டபாணி தையல் சங்க மாவட்ட செயலா ளர் ஆர்.ஹோச்சுமின், போக்குவரத்து ஊழி யர் சங்கம் மத்திய சங்க செயலாளர் வி.பால சுப்பிரமணியன் உட்பட நூற்றக்கும் மேற்பட் டோர் கலந்துகொண்டனர்.

;