districts

img

அடிப்படை வசதிகள் கோரி மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை சிபிஎம் சாலை மறியல்

வேதாரண்யம், செப்.20- நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண் யத்தை அடுத்த ஆயக்காரன்புலம் 3  சேர்த்தி ஊராட்சியில் அடிப்படை வசதி களை செய்து தரக் கோரி மாவட்ட ஆட்சியர்,  வட்டாட்சியர்களிடம் மனு கொடுக்கப்பட்டுள் ளது. ஆனால் அரசு அதிகாரிகள் இதை கண்டு கொள்ளவில்லை.  இதனை கண்டித்து, செவ்வாயன்று ஆயக் காரன்புலம் கடைத்தெருவில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அரசு அதி காரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் வட்டாட்சியர், அரசு அதிகாரிகள் யாரும் நேரில் வந்து பார்க்காததால், ஆயக் காரன்புலம் 3-வது கிளைச் செயலாளர் செல்லத்துரை தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. வாய்மேடு காவல் ஆய்வாளர் கன்னிகா, வேதாரண்யம் ஒன்றிய ஆணையர் பாஸ்கர் மற்றும்  ராஜு ஆகியோர் பேச்சுவார்த்தை க்கு வந்தனர். ஆனால் தோழர்கள் யாரும்  பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள வில்லை. இதனால், அரசு அதிகாரிகள் நேரில் பேச்சுவார்த்தை நடத்தி, எழுதி கொடுத்தது பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது. இந்தப் போராட்டத்திற்கு சிபிஎம் மாவட்ட  செயற்குழு உறுப்பினர் ஏ.வேணு, சிபிஎம்  தெற்கு ஒன்றியச் செயலாளர் பி.அம்பி காபதி, வி.ச ஒன்றிய செயலாளர் பி.எஸ்.பன்னீர்செல்வம், வி.தொ.சா ஒன்றியச் செய லாளர் பி.இளையபெருமாள், சிபிஎம் ஒன்றி யக் குழு உறுப்பினர் ஏ.எஸ். தங்கராசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;