நாகப்பட்டினம், மார்ச் 10- நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்றத்திற்குட்பட்ட சின்னத்தும்பூர் ஊராட்சி ஆலமழை கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம் பாட்டு நிதியிலிருந்து பல்லோக்கு மைய வளாக கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. கட்டிடப் பணிகளை கீழ்வேளூர் சட்ட மன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். நிகழ்வில் கீழையூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பாத்திமா மேரி, சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் கே.சித்தார்த்தன், கிளை செயலாளர் ஏ.டி.சுதாகர், வேளாங்கண்ணி பேரூராட்சி துணை தலைவர் ஏ.தாமஸ் ஆல்வா எடிசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.