districts

img

தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து சிபிஎம், தமுஎகச மரியாதை

நாகப்பட்டினம், செப்.17 - தந்தை பெரியாரின் 144 ஆவது பிறந்த நாளையொட்டி பல்வேறு இடங்களில் சிபிஎம்,  தமுஎகச மற்றும் அனைத்து அரசியல் கட்சி கள், இயக்கங்கள் சார்பில் மாலை அணி வித்து மரியாதை செலுத்தப்பட்டது.  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கம் நாகை மாவட்ட குழு சார்பில் பெரியார் பிறந்த தினத்தில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. தந்தை பெரியார் பிறந்த தினமான செப்டம்பர் 17 அன்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நாகை மாவட்ட குழுவின் சார்பில் நாகப்பட்டினம் மேலக்கோட்டைவாசல் அருகில் உள்ள பெரி யார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை  செய்யப்பட்டது. பின்னர் சமூக நீதி நாள் உறுதி மொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்வில் கீழ்வே ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி, தமுஎகச மாநில துணை பொதுச் செயலாளர் வெண்புறா, நாகை மாவட்ட தலைவர் கவிஞர் ஆவராணி ஆனந்தன், மாவட்ட செயலாளர் ஆதி.உதயகுமார், மாவட்ட பொருளாளர் க. ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை
சமூகநீதி நாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் மாவட்ட  வருவாய் அலுவலர் மா.செல்வி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் ஜி.கருப்ப சாமி, கோட்டாட்சியர் முருகேசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன் ஆகியோர் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
எம்.சின்னதுரை எம்எல்ஏ மரியாதை
கந்தர்வகோட்டையை அடுத்த புதுவிடுதி யில் உள்ள அவரது சிலைக்கு கந்தர்வ கோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர்  எம்.சின்னத்துரை தலைமையில் மாலை அணிவித்து சமூக நீதி உறுதிமொழி ஏற்கப் பட்டது.  புதுக்கோட்டையில் உள்ள அவரது சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  நகரச் செயலாளர் ஆர்.சோலையப்பன் தலை மையில் மரியாதை செய்யப்பட்டது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கம் சார்பில் புதுக்கோட்டையில் மாநில துணைத் தலைவர் நா.முத்துநில வன், ஆலங்குடியை அடுத்த புதுக்கோட்டை விடுதியில் மாவட்டக்குழு உறுப்பினர் ரமா.ராம நாதன், கீழாத்தூர் சமத்துவபுரத்தில் வடகாடு கிளைத் தலைவர் எஸ்.டி.பஷீர்அலி ஆகி யோர் தலைமையில் மரியாதை செய்யப்பட் டது. மாநில துணைத் தலைவர் ஆர்.நீலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தஞ்சாவூர்
தஞ்சையில், திராவிடர் கழகம் சார்பில்  பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப் பட்டது. திராவிடர் கழக மாவட்ட செயலாளர் அமர்சிங், மண்டல செயலாளர் அய்யனார் ஆகியோர் கலந்து கொண்டனர். மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்டக் குழு உறுப்பி னர் என்.குருசாமி மாநகரச் செயலாளர் வடிவே லன், நகரக் குழு உறுப்பினர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகரன் (திருவை யாறு), டி.கே.ஜி.நீலமேகம் (தஞ்சாவூர்), தஞ்சை மேயர் சண்.ராமநாதன் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்தனர்.  தஞ்சையில் தமுஎகச சார்பில் பெரியார் உருவச் சிலைக்கு, மாநில செயற்குழு உறுப்பி னர் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் மலர் மாலை அணிவித்தார். மாநில துணைப் பொதுச் செயலாளர் களப்பிரன், மாவட்டச் செய லாளர் இரா.விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். பேராவூரணி பெரியார் சிலைக்கு,  திராவிடர் கழக தலைமை பொதுக்குழு உறுப்பி னர் அரு.நல்லதம்பி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தமுஎகச தெருமுனை கூட்டம் 
பட்டுக்கோட்டை தலைமை தபால்  நிலையம் அருகில், தமிழ்நாடு முற்போக்கு  எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில்,  தந்தை பெரியார் பிறந்த தினத்தை முன்னிட்டு,  ‘பெரியாரை புரிந்து கொள்வோம்’ என்ற தலைப் பில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. கிளைத் தலைவர் முருக.சரவணன் கூட்டத் திற்கு தலைமை வகித்தார். தமுஎகச மாவட்டச் செயலாளர் இரா.விஜயகுமார் துவக்க வுரையாற்றினர். தமுஎகச மாநில செயற்குழு  உறுப்பினர் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன், எழுத்தாளர் எஸ்.வி. வேணுகோபாலன், மருத்துவர் சா.வீரமணி ஆகியோர் சிறப்பு ரையாற்றினர்.
கும்பகோணம்
தமுஎகச சார்பில் கும்பகோணம் பழைய  பேருந்து நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரி யாதை செலுத்தப்பட்டது. தமுஎகச மாநகர செயலாளர் அசோக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சா.ஜீவபாரதி, சிபிஎம் மாநகர செயலாளர் செந்தில்குமார், ஓய்வூதியர் சங்க வட்ட செயலாளர் பக்கிரி சாமி, காயத்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். நாச்சியார்கோவில் பேருந்து நிலையத் தில் உள்ள பெரியார் சிலைக்கு தமுஎகச மற்றும் சிஐடியு சார்பில் மாலை அணிவிக்கப் பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. சிஐடியு  தஞ்சை மாவட்ட செயலாளர் சி.ஜெயபால், ஓம்  சக்தி விநாயகா ஆட்டோ தொழிலாளர்கள் தமுஎகச மாவட்ட செயற்குழு உறுப்பினர் லெனின்பாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருத்துறைப்பூண்டி
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை நகர குழு சார்பில் மூடநம்பிக்கைக்கு எதிரான  முற்போக்குவாதி பெரியார் பிறந்த தினத்தை முன்னிட்டு முத்துப்பட்டி நகர குழுவில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் நகர  செயலாளர் செல்லதுரை, வாலிபர் சங்க நகர  செயலாளர் சரவணன் மற்றும் நகர குழு, கிளை உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினர்.

;