districts

img

சிஐடியு மாநில மாநாடு வெண்மணி சுடர் பயணக் குழுவை நாகைமாலி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

நாகப்பட்டினம்,  அக்.31 - இந்திய தொழிற்சங்க மையத்தின் 15 வது மாநில மாநாடு நவம்பர் 4, 5, 6  ஆகிய தேதிகளில் கன்னியா குமரி மாவட்டத்தில் நடை பெறுகிறது. நாகப்பட்டினம் மாவட் டம் கீழ்வேளூரை அடுத்த கீழவெண்மணியில் உள்ள வெண்மணி தியாகிகள் நினைவிடத்தில் சிஐடியு மாநில மாநாட்டிற்கான வெண் மணி தியாகிகள் நினைவுச் சுடர் பயண குழுவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழு தலைவரும், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினருமான வி.பி.நாகைமாலி தொடங்கி வைத்தார். இம்மாநாட்டிற்காக வீரம்  விளைந்த பூமியான கீழ வெண்மணியில் உழைப் பாளி வர்க்க வேள்வியின் நினைவாக, 44 பேர் இன்னு யிரை கொடுத்து செங்கொடி  காத்தனர். அந்த தியாகி களின் செஞ்சுடரை கீழ்வேளூர் சட்டமன்ற உறுப் பினர் வி.பி.நாகைமாலி கொடுக்க, இந்திய தொழிற் சங்க மையத்தின் மாநில  செயலாளர்களில் ஒருவரும்,  பயண குழு தலைவருமான  சி.ஜெயபால் பெற்றுக் கொண்டார்.  இச்சுடர் பயண குழு நாகை மாவட்டத்தில் சிக்கல்,  மேலபிடாக்கை வழியாக திருவாரூர் மாவட்டம் லட்சு மணாங்குடி, மன்னார்குடி,  தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்த நாடு, பட்டுக்கோட்டை, வழியாக சென்று நவ.3 ஆம்  தேதி இரவு கன்னியாகுமரி யில் மாநில மாநாடு நடைபெ றும் இடத்திற்கு சென்ற டைகிறது.  இந்நிகழ்வில் சிஐடியு நாகை மாவட்டச் செயலா ளர் கே.தங்கமணி, மாவட்ட  தலைவர் சிவன் அருட்செல் வன், பொருளாளர் என்.வெற்றிவேல், நாகை தொழிற் சங்க கூட்டமைப்பு தலை வர்  சு.சிவக்குமார், திருவா ரூர் மாவட்ட செயலாளர் டி. முருகையன், மாவட்டத் தலைவர் எம். கே.என்.அனிபா, மாவட்ட பொருளா ளர் இரா.மாலதி உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.

;