districts

img

அக்கரைப்பட்டி ஊராட்சியில் பனிக்கட்டி நிலையம் திறப்பு நாகைமாலி எம்எல்ஏ பங்கேற்பு

நாகப்பட்டினம், அக்.20 - நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர்  சட்டமன்றத்திற்கு உட்பட்ட அக்கரைப் பேட்டை ஊராட்சியில் 30 மெட்ரிக் டன்  பனிக்கட்டி தயாரிக்கும் நிலையம், மீன்கள் பதப்படுத்தும் நிலையம், நீர்த்தேக்கத் தொட்டி உள்ளிட்டவை தமிழக முதல்வரால்  காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கப் பட்டன.  இதன் பிறகு அதனை கீழ்வேளூர் சட்ட மன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி, மாவட்ட  ஆட்சியர் அருண் தம்புராஜ், மீன் வளர்ச்சி  கழக தலைவர் என்.கவுதமன், அக்கரைப் பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் அழியாநிதி  மனோகரன் உள்ளிட்டோர் நேரில் சென்று பார்வையிட்டனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் மீன்பிடி தொழில் பிரதான தொழில்களில் ஒன்று. இங்கு செயல்பட்டுக் கொண்டிருக்கும் துறை முகத்தில், ஆண்டுக்கு 15 ஆயிரம் மெட்ரிக் டன் அளவிற்கு மீன் பிடிக்கப்படுகிறது. மீன்களை பக்குவப்படுத்தி விற்பனைக்கு அனுப்புவதற்கும், ஆழ்கடலில் மீன்பிடிக்க  செல்வதற்கும், மீன்களை பதப்படுத்துவதற் கும் பனிக்கட்டி இன்றியமையாத ஒன்றாகும்.  தனியார் பனிக்கட்டி உற்பத்தி செய்யும் இடங்களில் மீனவர்கள் கூடுதலாக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்படு கிறது. இதனை தமிழக அரசின் கவனத்திற்கு  கொண்டு சென்று, அரசின் சார்பில் இப்பகு தியில் ஒரு பனிக்கட்டி தயாரிக்கும் நிலையம்  வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட் டது. இந்த கோரிக்கையை ஏற்று ரூ.1.85 கோடி செலவில், பனிக்கட்டி உற்பத்தி நிலையம்,  மீன் பதப்படுத்தும் மையம், 3500 லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டி உள்ளிட்டவை கட்டி முடிக்கப்பட்டன.  மீனவர்கள் எளிய முறையில் பனிக்கட்டி களை வாங்கிக் கொள்ளவும், கடலிலிருந்து மீன்பிடித்து வரும் படகுகள் நேரடியாக பனிக்கட்டி நிலையத்திற்கு வந்து வாங்கிச் செல்ல வசதியாகவும் இந்த நிலையம் வடி வமைக்கப்பட்டுள்ளது.

;