districts

img

ஒன்றிய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

தேனி, பிப்.28- கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சாதகமாகவும், ஏழை, எளிய நடுத்தர மக்களை வஞ்சிக்கும் வகையில் மோடி அரசு நிறைவேற்றியுள்ள மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிப்ரவரி 28 செவ்வாய்க்கிழமையன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேனி மாவட்டத்தில் 10 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .தேனி  பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தேனி  தாலுகா செயலாளர் இ.தர்மர் தலைமை வகித்தார் .மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி கண்டன உரையாற்றினார் . ஆண்டிபட்டியில் மாவட்ட செயலாளர் ஏ.வி.அண்ணாமலை சிறப்புரையாற்றினார் . கூட லூர், கம்பம், பண்ணைப்புரம் ,போடி ,ஜெயமங்கலம் ,கடமலைக்குண்டு உத்தமபாளையம், சின்னமனூர் ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடமலைக்குண்டு கிராமத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தங்க பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கண்ணன், ஒன்றிய செயலாளர் போஸ் ஆகியோர் பேசினர்.
விருதுநகர் 
விருதுநகர் அருகே சூலக்கரையில் நடைபெற்ற போராட்டத்திற்கு கற்பூரம் தலைமையேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.வேலுச் சாமி, மூத்த தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியன் ஆகியோர் பேசினர்.  இராஜபாளையம் கிழக்கு ஒன்றியம் அய்யனாபுரத்தில் ஒன்றிய செய லாளர் எம்.முனியாண்டி தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் எம்.மகாலட்சுமி உரையாற்றினார்.
சிவகங்கை 
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பழைய பேருந்து நிலைய வளாகத்தில் ஒன்றிய செயலாளர் ஆண்டி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தண்டியப்பன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துராமலிங்க பூபதி ஆகியோர் பேசினர். 
இராமநாதபுரம்
இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் தாலுகா செயலாளர் பி. முத்துசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செய லாளர் வி.காசிநாத துரை பேசினார். கடலாடி கிழக்கு தாலுகா சிக்கல் மையத்தில் தாலுகா செயலாளர் எஸ்.போஸ் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம் முத்துராமு, கே.கருணாகரன் ஆகி யோர் பேசினர்.
திண்டுக்கல் 
திண்டுக்கல் மாவட்டத்தில் மாலை நேர தர்ணா போராட்டங்கள் நடை பெற்றன. திண்டுக்கல்லில் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர்  இராமலிங்கம், மாநிலக்குழு உறுப்பினர் என்.பாண்டி, நகரச்செயலாளர் அரபுமுகமது, சிபிஎம் மாமன்ற உறுப்பினர்கள் ஜோதிபாசு, கே.எஸ். கணேசன், மாரியம்மாள் ஆகியோர் பேசினர். என்.எஸ்நகரில் மாநில  செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம், திண்டுக்கல் ஒன்றி யச்செயலாளர் சரத்குமார், ஆகியோர் பேசினர். ரெட்டியார்சத்திரத்தில் மாவட்டச்செயற்குழு உறுப்பினர் பி.வசந்தாமணி, ஒன்றியச்செயலாளர் கே.எஸ்.சக்திவேல் ஆகியோர் பேசினர்.  வேடசந்தூரில் மாவட்டச்செயற்குழு உறுப்பினர் டி.முத்துச்சாமி, ஒன்றி யச்செயலாளர் பெரியசாமி ஆகியோர் பேசின்ர். குஜிலியம்பாறையில் மாவட்டச்செயற்குழு உறுப்பினர் பி.செல்வராஜ், ஒன்றியச்செயலாளர் ராஜ ரத்தினம் ஆகியோர் பேசினர். அய்யலூரில் மாவட்டச்செயலாளர் ஆர்.சச்சிதானந்தம், ஒன்றியச்செயலாளர் மலைச்சாமி ஆகியோர் பேசினர். ஒட்டன்சத்திரத்தில் மாவட்டச்செயற்குழு உறுப்பினர் அருள்செல்வன், ஒன்றியச்செயலாளர் சிவமணி ஆகியோர் பேசினர்.  பழனியில் நகர்க்குழு உறுப்பினர் ஆர்.ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.ராமசாமி, பழனி நகர்மன்ற துணைத் தலைவர் கே. கந்தசாமி ஆகியோர் பேசினர்.  நிலக்கோட்டையில் ஒன்றியச்செயலாளர் செந்தில்குமார் தலை மையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நத்தத்தில் பேரூராட்சி 16 வது  வார்டு கவுன்சிலர் விஜயவீரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

;