districts

மலைப்பகுதியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

கடமலைக்குண்டு, மே 21 - தேனி மாவட்டம், கடமலைக்குண்டு அருகே கொம்புக் காரன்புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் தமிழன் என்பவரின் மகன் கார்த்திக் (வயது 21). ஜே.சி.பி வாகன ஓட்டுநராக வேலை  செய்து வந்தார். கார்த்திக் கடந்த ஒரு வருடமாக அல்சர் நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். வெள்ளிக்கிழமை காலை யில் கார்த்திக் அவரது வீட்டிலிருந்த ஆடுகளை மேய்ச்சலுக் காக அருகில் உள்ள மலைப்பகுதிக்கு அழைத்து சென்றார். அவர் சென்று நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் சந்தேக மடைந்த அவரின் பெற்றோர் மலைப்பகுதியில் சென்று தேடிப் பார்த்தனர். அப்போது மலைப்பகுதியில் உள்ள மரத்தில் கார்த்திக் தூக்கில் தொங்கியவாறு சடலமாக கிடப்பதை பார்த்து அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.  இதுதொடர் பாக தகவலறிந்த கடமலைக்குண்டு போலீசார் கார்த்திக்  உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனிஅரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.