districts

முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பு 500 கன அடியாக உயர்வு

தேனி, ஜூன் 14- முல்லைப்பெரியாறு அணையிலி ருந்து தண்ணீர் திறப்பு 500 கன அடி யாக உயர்த்தப்பட்டது. முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்  தாக்கு பகுதி முதல் போக பாசனத்திற் காக கடந்த 1ந் தேதி 300 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதில் 200 கன  அடி பாசனத்திற்கும், 100 கன அடி தேனி  மாவட்ட குடிநீர் தேவைக்கும் வெளியேற்  றப்பட்டது. அதன்பிறகு பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு 300 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. செவ்  வாய்க்கிழமை காலை முதல் பாசனத்  திற்கு 400 கன அடியும், குடிநீர் தேவைக்கு 100 கன அடி என மொத்தம் 500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணை யின் நீர்மட்டம் 131.15 அடியாக உள்  ளது. நீர்வரத்து 137 கன அடி. நீர்  இருப்பு 4966 மி.கன அடி. வைகை அணை யின் நீர்மட்டம் 58.20 அடியாக உள்ளது. நீர்வரத்து இல்லை. பாசனத்திற்கு 800 கன அடி, மதுரை மாநகர குடிநீருக்கு 69 கன அடி என மொத்தம் 869 கன அடி  நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு  3267 மி.கன அடியாக உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 42.30 அடி. வரத்து 80 கனஅடி. சோத்துப்  பாறை அணையின் நீர்மட்டம் 82.32 அடி. திறப்பு 3 கன அடி.
மின் உற்பத்தி
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் மூலம் லோயர்கேம்ப் மின் உற்பத்தி நிலையத்தில் 4 ஜெனரேட்டர்கள் மூலம்  மின் உற்பத்தி நடைபெறுகிறது. அதன்  படி கடந்த 1ந் தேதி முதல் 400 கன அடி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில் 36 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்  யப்பட்டது. 500 கன அடி வெளியேற் றப்படுவதால் 45 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
கும்பக்கரையில் அனுமதி 
கும்பக்கரை அருவியில் அருவிக்கு  வரும் தண்ணீரின் அளவு குறைந்து சீராக உள்ளது. இதனைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது.

;