districts

தற்கொலை முயற்சி இல்லாத தமிழகத்தை உருவாக்கிட மாணவர்கள் உறுதியேற்பு!

தூத்துக்குடி, செப்.12- கோவில்பட்டி புத்தக கண்காட்சியில் தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் உலக தற்கொலை முயற்சி தடுப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. நாடு முழுவதும் செப்டம்பர் 10ம் தேதி  உலக தற்கொலை முயற்சி தடுப்பு தினம்  கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கோவில் பட்டி காந்தி மண்டபத்தில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியில் மாணவர்கள் மற்றும் வாசகர்கள் 50க்கும் மேற்பட்டோர்  தற்கொலை முயற்சி இல்லாத தமிழகத்தை உருவாக்கிடவும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அனைவருக்கும் தன்னம்  பிக்கை மற்றும் தலைசிறந்த தலைவர் களின் சுவையான நிகழ்வுகள் என்ற புத்த கங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு புத்தக விற்ப னையாளர்கள் சங்க செயலாளர் கார்த்திக்  தலைமை வகித்தார். பாரதியார் நினைவு  அறக்கட்டளை தலைவர் முத்து முருகன்,  கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிகு லேஷன் பள்ளி முதல்வர் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். புத்தக கண்காட்சி விற்பனையாளர்கள் சங்க பொருளாளர் ரமேஷ் வரவேற்றார். கோவில்பட்டி ரோட் டரி சங்க முன்னாள் தலைவர் வீராச்சாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்கள் மற்றும் வாசகர்களுக்கு புத்த கங்களை பரிசாக வழங்கி பேசினார். இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட நூலக ஆய்வாளர் பணி நிறைவு பூல் பாண்டி, கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் லட்சுமணன்பிரபு, தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர் விக்டர்,உள்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் புத்தக  விற்பனையாளர்கள் சங்க உறுப்பினர் ராஜ பாண்டி நன்றி கூறினார்.

;