districts

திருவாரூர்: 15 பேருக்கு  கலை விருதுகள் அறிவிப்பு

திருவாரூர், ஜூலை 7-  தமிழ்நாட்டின் கலை பண்புகளை மேம்படுத்தும் மற்றும்  பாதுகாக்கும் நோக்கிலும், கலைஞர்களின் கலைப் பண்பு களை சிறப்பிக்கும் வகையிலும் மாவட்டக் கலை மன்றங்கள் வாயிலாக 2021-2022ஆம் ஆண்டிற்கு ஒரு கலைப் பிரிவிற்கு  3 கலைஞர்கள் வீதம் 5 கலைப்பிரிவிற்கு 15 கலைஞர் களை தேர்வு செய்து கலை விருதுகள் வழங்கிட ஆணையி டப்பட்டுள்ளது. இவ்வாணையின் படி, 2021-2022ஆம் ஆண்டிற்கு 18 வயதும், அதற்குட்பட்டவர்களில் கிராமிய நடனத்திற்கு எம்.எஸ்.பிரியதர்ஷினி, மிருதங்கக் கலைஞர் ச.சபாபதி, பரதநாட்டியத்தில் கா.ஹரிணிஸ்ரீ ஆகியோர்களுக்கு கலை இளமணி விருதும், 19 வயது முதல் 35 வயதிற்கு உட்பட்ட கலைஞர்களுக்கு, நாதசுரக் கலைஞர் திருப்பாம்புரம்  டி.எஸ்.என்.குஞ்சிதபாதம், நாதசுரக் கலைஞர் சே.ராஜேஷ், நாடகக் கலைஞர் ந.விவேக் ஆகியோர்களுக்கு கலை வளர் மணி விருதும், 36 வயதுமுதல் 50 வயதிற்குட்பட்ட கலைஞர்  களுக்கு நாட்டுப்புறப் பாடகர் சு.ராஜீவ்காந்தி, இசைக்கலை ஞர் ஆர்.இராஜேஸ்வரி, நாடகக் கலைஞர் ப.ஜெயபால் ஆகி யோர்களுக்கு கலைச்சுடர் மணி விருதும், 51 வயது முதல்  65 வயதிற்குட்பட்ட கலைஞர்களுக்கு நாட்டுப்புறப் பாடகர்  ர.சிவாஜி, சிலம்பாட்டம் மற்றும் காரத்தே கலையில் வே. செல்லபாண்டியன், நாட்டுப்புறப் பாடகர் செ.ஜோசப் புண்ணி யநாதன் ஆகியோர்களுக்கு கலை நன்மணி விருதிற்கும், 66 வயதிற்குற்கு மேற்பட்ட வயது பிரிவில் ஆர்மோனியக் கலைஞர் மா.நடராஜன், நாடக்கலைஞர் சே.குமாரசாமி, ஓவிய ஆசிரியர் ஆர்.பாலகேசவன் ஆகியோர்களுக்கு கலை  முதுமணி விருதிற்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். விருதிற்காக தேர்வு செய்யப்பட்ட கலைஞர்களுக்கு திருவாரூர் மாவட்டத்தில் நடைபெறும் அரசு விழாக்களில் கலை விருதுகள் வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

;