districts

img

புதிய சாலை அமைக்கக் கோரி சிபிஎம் சார்பில் பாடை கட்டி போராட்டம்

திருத்துறைப்பூண்டி, ஏப்.28- திருவாரூர் மாவட்டம் திருத் துறைப்பூண்டி ஒன்றியம் ஆதி ரெங்கம் சேகல் ஊராட்சிக்குட் பட்ட சுமார் நான்கு கிலோ மீட்டர் சாலை 10 ஆண்டுகளுக் கும் மேலாக போடாமல் மக்கள் நடமாட கூட தகுதியற்ற குண்டும் குழியுமான சாலையாக மாறி இருக்கிறது. இந்த சாலையை அகலப்படுத்தி புதிய சாலை அமைத்து தர வேண்டி மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருத் துறைப்பூண்டி தெற்கு ஒன்றியம் ஆதிரங்கம் கிளையின் சார்பில் பாடை  ஊர்வலம் நடைபெற்றது.  ஊர்வலத்திற்கு ஆதிரங்கம் கிளை செயலாளர் ஆர்.ராஜா தலைமை வகித்தார். பாடை யினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பி னர் ஐ.வி.நாகராஜன் சுமந்து சென்று போராட்டத்தை துவக்கி வைத்தார். போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சி.ஜோதிபாசு, மாவட்டக் குழு உறுப்பினர் டி.சுப்பிரமணியன், ஏ.பிரகாஷ், ஒன்றியச் செயலாளர் டி.வி.காரல் மார்க்ஸ், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் வி.ரவி, ஏ.கே.வேலவன், கே.மதியழகன், ராஜேஸ்வரி, ரங்கசாமி, கிளை செயலாளர் சாமிகண்ணு, நல்ல தம்பி, விச ஒன்றியக்கழு சுந்தரே சன் மற்றும் கட்சி உறுப்பினர் கள், மாதர் சங்கம், வாலிபர் சங்கம், மாணவர் சங்கம் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டு கடைத் தெருவில் இருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் சுமந்து  சென்று ஆதிரங்கம் வந்தடைந் தது. அங்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகுமார் பொறியா ளர் சூரிய மூர்த்தி, காவல் ஆய்வா ளர் கழனியப்பன், வருவாய் ஆய்வாளர் சிவசங்கரி ஆகி யோர் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.  பேச்சுவார்த்தையில் ஆதி ரங்கத்தில் இருந்து கொறுக்கை வரை சுமார் 8 கிலோமீட்டர் உள்ள  சாலையை 6 லட்சத்து 75 ஆயி ரத்து 80 ஆயிரம் ரூபாயில் 19 பாலங்கள், இரண்டு பெரிய பாலம், ஒரு தடுப்புச் சுசவர் உள்ளிட்ட அனைத்திற்கும் ஒப் பந்தம் போடப்பட்டு அதிகாரிகள் அதனை ஆய்வு செய்து சென்றி ருக்கிறார்கள். இன்னும் இரண்டு மாத காலங்களில் சாலை பணி  துவங்கி விடும் என்ற உத்தரவா தம் அளித்தனர். இதன் அடிப்ப டையில் பாடை கட்டும் ஊர்வலம் தற்காலிகமாக ஒத்திவைக்கப் பட்டது.

;