districts

img

இறந்தவர் உடலை ஆற்றுக்குள் இறங்கி கொண்டு செல்லும் அவலம்

குடவாசல், ஜூலை 6- திருவாரூர் மாவட்டம், குடவாசல் ஒன்றி யம், அன்னியூர் ஊராட்சியில் உள்ள பாக சாலை கிராமத்தில் ஓடும் கீர்த்திமான் ஆற்றைக் கடந்துசெல்ல பாலம் இல்லை. இதனால் இறப்  பவர்களின் உடலை அடக்கம் செய்ய மயா னத்திற்கு கொண்டுசெல்ல ஆபத்தான நிலை யில் ஆற்றை கடந்து செல்ல வேண்டியுள்ளது. இறந்தவரின் உடலை ஆற்றுக்குள் இறங்கி  கொண்டு செல்லும் காட்சியும் உடலை சுமந்து சென்ற நபர்கள் நிலை தடுமாறி தண்ணீரில் மூழ்கும் காட்சியும் மூழ்கிய நபர்களை காப்பாற்  றப்பட்ட சம்பவம் சமூக வலைத்தளத்தில் பரவி யது.  இதுகுறித்து கடந்த 3 ஆம் தேதி தீக்கதிர் நாளிதழில் செய்தியாக வெளியிடப்பட்டது. இதனையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்ட செயலாளர் ஜி. சுந்தரமூர்த்தி அந்தப் பகுதிக்கு நேரில் சென்று  பொது மக்களை சந்தித்து ஆறுதல் கூறி, நடந்த சம்பவங்களை கேட்டறிந்தார்.  அந்த பகுதியில் வசிக்கும் ஊர் பெரிய வர்கள் கூறுகையில், இந்த கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரு கிறோம். பல தலைமுறையாக இறந்தவர்  உடலை அடக்கம் செய்ய மறுகரைக்கு கொண்டுசெல்ல ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து செல்கிறோம். தேர்தல் சம யத்தில் வரும் அரசியல் கட்சி தலைவர்களி டம் ஆற்றின் குறுக்கே பாலம் அமைத்து தரு மாறு பலமுறை கோரிக்கை வைத்தும் பயன் இல்லை.

கடந்த ஆட்சியாளர்களிடம் எங்களின் கோரிக்கையை மனுவாக கொடுத்தும் இது நாள் வரையில் எங்கள் ஊருக்கு பாலம் அமைக்கவில்லை. இந்த நிலையில் இச் சம்பவம் நடந்துள்ளது. எங்கள் நிலை அறிந்து நேரில் சந்திக்க வந்ததற்கு மிகவும் ஆறுத லாக இருக்கிறது. மீண்டும் இது மாதிரியான விபரீதமான சம்பவம் நடைபெறும் முன்பாக தமிழக அரசின் சார்பாக எங்களின் நீண்ட நாள் கோரிக்கையான கீர்த்திமான் ஆற்றின் மேல் பாலம் அமைத்து உரிய நடைவடிக்கை எடுக்க உங்களோடு இணைந்து செயல்பட்டு அனைத்து முயற்சிக்கும் ஒத்துழைப்பு தருவ தாக ஊர் பெரியவர்கள்,பெண்கள் உள்ளிட்ட அந்தப் பகுதி மக்கள் ஒரே குரலில் கூறினர். மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமுர்த்தி மக்  கள் மத்தியில் பேசுகையில், தங்களின் நீண்ட கால கோரிக்கையை உரிய முறையில் அரசின்  கவனத்திற்கு கொண்டு சென்று பாலம் கட்ட அனைத்து நடவடிக்கையும் எடுப்பதாக உறுதியளித்தார். கள ஆய்வின்போது மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எம்.சேகர்,குடவாசல் வடக்கு பகுதி  ஒன்றியச் செயலாளர் கே.ரவிச்சந்திரன், மாவட்டக் குழு உறுப்பினர் டி.வீரபாண்டியன் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள், கிளை  செயலாளர்கள் உடனிருந்தனர்.

;