districts

img

உலக தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் தொடங்கி வைத்தார்

திருவாரூர், ஆக. 4 - தாய்ப்பாலின் உன்னதத்தை அனை வருக்கும் உணர்த்தும் விதமாக உலகெங் கும் “உலக தாய்ப்பால் வாரம்” ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் முதல் வாரம் (ஆக.1 முதல் 7 வரை) கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு உலக தாய்ப்பால் வார  விழா-2022 குறித்த விழிப்புணர்வு பேரணி யினை திருவாரூர் மாவட்ட ஆட்சியரக வளா கத்தில், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி புதன்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரணி, மாவட்ட ஆட்சி யரக அலுவலக வளாகத்தில் தொடங்கி, திரு வாரூர் அரசு கல்லூரி மருத்துவமனை வரை  சென்றடைந்தது.  இப்பேரணியில் 200-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மைய பணியாளர்கள் விழிப்பு ணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர். அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் அமைச்சர் தலைமை யில் அனைத்துத் துறை வளர்ச்சி திட்டப்பணி கள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடை பெற்றது. இந்நிகழ்வில் திருவாரூர் சட்ட மன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவா ணன், மாவட்ட ஊராட்சித் தலைவர் கோ.பால சுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித் தனர். அதனைத் தொடர்ந்து, பாலூட்டும் தாய் மார்களுக்கு ஊட்டச்சத்து உணவுகள் அடங்கிய தொகுப்பினை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர்  வழங்கினார்.

;